சேவாக்கின் நல்ல மனது : 1

நம் அதிரடி மன்னர் சேவாக் பிரபல இந்தி தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். அந்த நிகழ்ச்சியின்  பெயர் உமீட் இந்தியா . அவற் தற்போது அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் நிதி திரட்டி  இந்தியாவில் உள்ள தடகள வீரர் வீராங்கனைகளுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

சேவாக்கின் நல்ல மனது : 2

அந்த நிகழ்ச்சியின்  பெயர் உமீட் இந்தியா, அந்நிகழ்ச்சியை EPIL  என்ற இந்தி தொலைகாட்சியில் தொகுத்து வழங்கிவருகிறார் அதிரடி மன்னர் வீரேந்திர சேவாக். அந்நிகழ்ச்சியின் நோக்கமானது 2020 ஆண்டு டோக்கியோவில்  நடக்கும் ஒலிம்பிக் போட்டியை வெல்லும் நோக்கமாக வைத்து பயிற்சி பெற்றுவரும் சிறந்த 13 தடகள வீரர்களின் வாழ்க்கை காதையை எடுத்துரைக்கும்  நிகழ்ச்சியாகும் .

தற்போது  இந்நிகழ்ச்சி மல்யுத்த வீராங்கனை சாக்கி மாலிக், நீச்சல் வீரர் சூயேஷ் யாதவ், குண்டெறிதல் வீரர் டியூட்டி சந்த் ஜூடோ வீரர் வினேஷ் பகோட் ஆகியோரது வாழ்க்கையை ஒளிபரப்பி வருகிறது.

சேவாக்கின் நல்ல மனது : 3
????????????????????????????????????

அவர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பது மட்டும் இல்லாமல் அவர்களுக்கான பயிற்ச்சிக்கு உதவும் வகையில் மக்களிடம் நிதி திரட்டவும் இந்நிகழ்ச்சி முயற்சி எடுத்து வருகிறது. இதற்க்கு அச்சாணி இட்டது நம்ம தல சேவாக் ஆகும். மேலும் பல மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளிடமும் நிதி திரட்டும் வகையில் இந்நிகழ்ச்சி தொகுப்பாளர் சேவாக் செயல்பட்டு வருகிறார்.

    இந்நிகழ்ச்சி பற்றி சேவாக் கூறியாதாவது:

இந்த மக்கள் மூலம் திரட்டப்படும் நிதியின் மூலம் சிறமப்படும் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு உதவ முடியும்  என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நிகழ்ச்சிக்கான பட பிடிப்பின் போது நாங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை சிறமங்களை பார்த்தோம். அவ்வாழ்க்கை மிகவும் கொடியது. அவர்களுக்கான நிதி நாளுக்கு ரூபாய் 600 மட்டும் அரசு தருகிறது என்பது மிகவும் வருத்ததிர்க்கு உரியது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்குடன் பயிற்ச்சி எடுத்தும் வரும் அவர்களுக்கு 600 என்பது மிக மிகக் குறைவான நிதியாகும்.

சேவாக்கின் நல்ல மனது : 4

உமீடு இந்தியா நிகழ்ச்சியின் நோக்கமானது மக்கள், ரசிகர்கள், தன்னார் வலர்கள் மற்றும் பல பொது நிறுவனங்களை ஒன்றினைத்து ஒலிம்பிக் பயிற்ச்சி எடுக்கும் தடகள வீரர் வீராங்கனைகளுக்கு உதவி புரிதல் ஆகும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் நிதி திரட்டும் அமைப்பின் தலைவர் அகுல் திருப்பதி கூரியதாவது, ஒரு நிகழ்ச்சியாக உமது இந்தியாவின் நோக்கமானது வாழ்க்கையில் சிறமப்படும் தடகள வீரர் வீராங்கனைகளின் நிலையை எடுத்துரைப்பதாகும். அவர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்ர்க்க கூடியவர்கள். நம் நாட்டில் அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிக்ள் கூட இல்லை. இம் மக்கள் நிதியின் மூலம் அவற்றை ஏற்படுத்த முடியும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

என்ன இருந்தாலும் தல, தல தான். சேவாக் அவ்வப்போது தனது மனித்தை இதன் மூலம் நிரூபித்து வருகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *