இந்த பையன சரியா பயன்படுத்திக்கங்க; அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர் !! 1

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்ததாவது, இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கி அவரை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது பலத்தை நிரூபித்து அதிரடி வெற்றி பெற்றது இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்த பையன சரியா பயன்படுத்திக்கங்க; அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர் !! 2

இந்நிலை இன்று நடக்க உள்ள இறுதி ஒருநாள் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணிக்கு ஒருநாள் தொடரின் கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய போட்டி பார்ப்பதற்கே போர்க்களம் போன்று காட்சியளிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இரண்டு போட்டிகளிலும் மிக சிறப்பாக செயல்பட்டார்.முதல் போட்டியில் ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கினார். பின் சுதாரித்துக்கொண்ட பிரசித் கிருஷ்ணா மிக சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது இந்நிலையில் சிறப்பாக பந்துவீசிய கிருஷ்ணா ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாஸ் பட்லர் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

இந்த பையன சரியா பயன்படுத்திக்கங்க; அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர் !! 3

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்ததாவது, பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எப்படி இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுகிறாரோ, அதேபோன்று இவரும் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். மேலும் பிரசித் கிருஷ்ணா நல்ல வேகத்தில் அருமையாக பந்து வீசுகிறார் இருந்தபோதும் இவர் பவர் பிளே ஓவர்களில் ரன்களை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *