"தோனி எப்போ கிளம்புறாருனு கேட்டு சொல்லுங்க" - தேர்வுக்குழுவை வற்புறுத்திய சேவாக்!! 1

தோனியின் ஓய்வு முடிவு குறித்து தேர்வுக்குழு அவருடன் நேரடியாகப் பேசுவதே சரியாக இருக்கும் என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அன்றில் இருந்து தற்போது வரை தோனி எப்போது ஓய்வு பெறுவார்? இந்திய அணியில் அவருக்கு இனி வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில் பிசிசிஐ நிர்வாகம் இனி தோனி 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறமாட்டார். அப்படியே எடுக்கப்பட்டாலும் போட்டியில் ஆடும் 11 வீரர்களில் அவர் இடம்பெற மாட்டார். ஒரு ஆலோசகராகவே தோனி அணியில் இடம் பெற முடியும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தது.

"தோனி எப்போ கிளம்புறாருனு கேட்டு சொல்லுங்க" - தேர்வுக்குழுவை வற்புறுத்திய சேவாக்!! 2

இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி துவங்க இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம் பெறுவாரா? என்ற கேள்விகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கான விடை நாளை (ஜூலை 19) கிடைத்துவிடும். ஏனெனில் நாளை மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய வீரர்களின் பட்டியலை தேர்வுக்குழு வெளியிட இருக்கிறது.

தற்போது தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் துவக்க வீரர் சேவாக் பேசுகையில், “தோனியிடம் அவரது ஓய்வு குறித்து இந்திய அணியின் தலைமை தேர்வு குழு அதிகாரி எம் எஸ் கே பிரசாத் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதே சரியாக இருக்கும். தோனி அடுத்தடுத்து வரும் தொடர்களில் எடுக்கப்பட மாட்டார் என்பதை அவரிடம் நேரடியாக கூறிவிட்டு எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

"தோனி எப்போ கிளம்புறாருனு கேட்டு சொல்லுங்க" - தேர்வுக்குழுவை வற்புறுத்திய சேவாக்!! 3

இதனை அவருக்கு தெரியப்படுத்தாமல் அணியில் இருந்து புறக்கணிப்பது சரியான ஒன்றாக இருக்காது. நான் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பே என்னிடம் கூறாமலேயே என்னை இந்திய அணியிலிருந்து தேர்வுக்குழு புறக்கணித்து வந்தது. இது எவ்விதத்திலும் நியாயமாக இருக்காது. இந்த தவறை தற்போது உள்ள தேர்வுக்குழு தலைவர் தோனிக்கு செய்யக்கூடாது. அவர் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பை கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *