ஸ்மித்தை நோக்கி 7 விரலை காட்டி.. வேற லெவல் ஸ்லேட்ஜிங் செய்த பாக். பந்துவீச்சாளர்.. 'அடுத்த போட்டியில் பாத்துக்கொள்கிறேன்' ஸ்மித் பதிலடி! 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திவிட்டு 7 விரல்களை ஸ்மித் நோக்கி காட்டியுள்ளார் பாக்., சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஷஸ் தொடருக்கு பிறகு ஆடும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா பந்தில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

ஸ்மித்தை நோக்கி 7 விரலை காட்டி.. வேற லெவல் ஸ்லேட்ஜிங் செய்த பாக். பந்துவீச்சாளர்.. 'அடுத்த போட்டியில் பாத்துக்கொள்கிறேன்' ஸ்மித் பதிலடி! 2

இந்த அவுட் மூலம் யாசிர் ஷா ஸ்மித்தை 6 டெஸ்ட் போட்டிகளில் 7 முறை வீழ்த்தியுள்ளார். இதை அவருக்கு உணர்த்தும் விதமாக, ஸ்மித் வெளியேறும் போது ஏழு விரல்களை நீட்டி, ஸ்மித்தை ஏழு முறை வீழ்த்தியிருக்கிறேன் என்றுகாட்டிக்கொண்டார்.

யாசிர் ஷாவின் இந்த சைகை எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து, எனது தவறுகளை சரி செய்யுமாறு உணர்த்தியுள்ளது என ஸ்டீவ் ஸ்மித் ஆரோக்கியமாக பேச்சுவார்த்தையை மேற்கொண்டார் .

ஸ்மித்தை நோக்கி 7 விரலை காட்டி.. வேற லெவல் ஸ்லேட்ஜிங் செய்த பாக். பந்துவீச்சாளர்.. 'அடுத்த போட்டியில் பாத்துக்கொள்கிறேன்' ஸ்மித் பதிலடி! 3

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் “இந்த போட்டியில் அவுட்டானது, அடுத்த போட்டியில் யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழக்கக் கூடாது என்ற உத்வேகத்தை கொடுத்தள்ளது. ஆகவே, அவருக்கு எதிராக கொஞ்சம் கூடுதலாக கவனமான முறையில் விளையாடுவேன்.

இந்த போட்டியில் நான்கு ரன்னிலேயே ஆட்டமிழந்துள்ளேன். பெரும்பாலான நேரத்தில் நான் 2-வது இன்னிங்சில் தேவையில்லாத ஷாட் மூலம் அவுட்டாகியுள்ளேன். ஆகவே, இதுபற்றி நான் பெரிய அளவில் கவலைப்படவில்லை” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *