விராட் கோலிக்கெல்லாம் விதிமுறைகள் என்பதே கிடையாதா கடுப்பான விரேந்தர் சேவாக் ! நடந்தது என்ன ?
விராட் கோலியும் அணியில் ஒரு வீரர் தான் அவர் கேப்டன் என்பதால் விதிமுறைகளை மீறி அவர் செயல்படுவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறார். அவர் பேசுகையில் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நான்காவது இடத்தில் சிரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் அவரை நேற்று டி20 போட்டியில் ஆட வைக்காமல் வெளியே அமர வைத்து விட்டார் விராட் கோலி.

கடந்த ஐந்து வருடமாக டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார் சிரேயாஸ் ஐயர். அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் சிரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. அவரை அமர வைக்க ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று யாரும் கேட்க முடியாது. சம்பந்தப்பட்ட ஐயருக்கு நேரே விராட் கோலியுடன் கேட்கும் அளவிற்கு துணிச்சல் இருக்காது.
நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விதிமுறை என்றால் அது அனைவருக்கும் ஒன்று போல் தான் இருக்கவேண்டும். ஆனால் அணியில் மற்ற வீரர்களுக்கு மட்டும்தான் விதிமுறை கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கு எந்த விதிமுறையும் இல்லை என்பது போல் தான் செயல்பட்டு வருகிறார். அல்லது இருக்கும் விதிமுறைகள் எதுவும் விராட் கோலிக்கு பொருந்தாதா என்று கேள்வி எழுப்பி அதனை வைத்து தொடர்ந்து பேசிய விரேந்தர் சேவாக்.
வரிசையிலும் விராட் கோலி தனது இடத்தை எப்போது மாற்றிக் கொள்ள மாட்டார். தான் மோசமாக ஆடினாலும் அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டார். சிறிய இடைவெளியில் கூட கொடுத்து ஆட மாட்டார். இது தவறானது என்று வெகுண்டெழுந்து பேசியிருக்கிறார் விரேந்தர் சேவாக்.
