அடுத்த வருடம் (2018) பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் ஸ்விட்ஸ்ர்லாந்தில் பனி கிரிக்கெட் நடக்கவுள்ளது. அந்த தொடரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான விரேந்தர் சேவாக், ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விளையாட உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷாஹித் அப்ரிடி உலகில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த டி10 தொடரிலும் அவர் விளையாடினார்.
தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக 2015ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடினார். அதன் பிறகு 2018இல் நடக்கவுள்ள பனி கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார்.
இந்த தொடரில் விளையாட போகும் சில நட்சத்திர வீரர்களின் பெயர்கள் வருமாறு :
விரேந்தர் சேவாக், முகமது கைப், ஷோயப் அக்தர், மஹேலா ஜெயவர்தனே, லசித் மலிங்கா, மைக்கல் ஹஸ்ஸி, ஜாக் காலிஸ், டேனியல் வெட்டோரி, நாதன் மெக்கல்லம், க்ராண்ட் இலியாட், மோன்டி பனேசர் மற்றும் ஓவெய்ஸ் ஷா..
“நான் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை, உலகின் அழகான இடத்தில் கிரிக்கெட் விளையாட காத்திருக்கிறேன். இந்த தொடர் வெற்றியடையும் என்று நம்புகிறேன்,” என தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் கூறினார்.
“இந்த தொடரில் பல நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளார்கள். சர்வதேச கிரிக்கெட் அளவில் அவர்கள் அனைவருக்கும் எதிராகவும் விளையாடி இருக்கிறேன். அவர்களுடன் நேரத்தை செலவழிப்பது சுவாரசியமாக இருக்கும், அதை தொடர்ந்து நல்ல கிரிக்கெட்டையும் விளையாடுவோம்,” என ஸ்மித் மேலும் கூறினார்.
அந்த தொடரை நடத்தும் வி.ஜே. ஸ்போர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி)-யிடம் இருந்து அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.
இந்த போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள் சிவப்பு நிற பந்தை உபயோக படுத்துவார்கள். இந்த கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் பாயில் நடக்கும். உலகின் அழகான நாட்டில் இந்த தொடர் நடைபெறுவதால், இந்த தொடர் வெற்றிகரமாக நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது.