தோனியா? ரிக்கி பாண்டிங்கா? மிகச்சிறந்த கேப்டன் யார்? சாஹித் அப்ரிடி கூறிய சரியான பதில்! 1

சிக்சர் அடிப்பதிலும் சரி மற்றும் தனது பந்துவீச்சு மூலம் எதிர் அணியை திணறடிப்பதில் வல்லமை வாய்ந்தவர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரி (Shahid Afridi). அவரின் கிரிக்கெட் ஆட்டம் போலே வலுவான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடியவர் அஃப்ரி.

எந்த விஷயத்திலும் தனது கருத்தை கூறுவதில் அவர் பயப்படுவதில்லை மற்றும் மனதில் தோன்றக்கூடியதை பேசக்கூடியவர். அதேபோலதான் இந்தியாவின் எம்.எஸ். தோனி (MS Dhoni) மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த கேப்டன் எனக் கேட்டபோது, அதற்கு பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் நேரடியாகவும், எளிமையாகவும் பதில் அளித்ததில் ஆச்சரியமில்லை.Shahid Afridi

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் (Twitter) தனது ரசிகர்களுடன் உரையாடும் போது, தோனியை பாண்டிங்கை விட சிறந்த கேப்டன் என்று கூறுவதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை எனக்கூறினார். பாண்டிங்கை விட தோனியைத் தேர்ந்தெடுப்பதன் காரணங்களை விளக்கிய அஃப்ரிடி, முன்னாள் இந்திய கேப்டன் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்ததோடு, ஒரு வழுவான அணியை உருவாக்கினார் எனக் கூறினார்.

“தோனி இளைஞர்களைக் கொண்ட ஒரு புதிய அணியை உருவாக்கியதால், ரிக்கி பாண்டிங்கை விட சற்று அதிகமாக தோனியை மதிப்பிடுகிறேன்” என்று அஃப்ரிடி ஒரு ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்தார்.

இதுவரை உலக கிரிக்கெட் விளையாட்டு (World Cricket) தோனி மற்றும் பாண்டிங் இருவரும் வெற்றிகரமான கேப்டன்கள்.MS Dhoni

2007 டி 20 உலகக் கோப்பை (2007 T20 World Cup), 2011 ஒருநாள் உலகக் கோப்பை (2011 ODI World Cup), மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி (2013 Champions Trophy) ஆகிய மூன்று ஐசிசி போட்டிகளிலும் வென்ற ஒரே கேப்டன் தோனி. அவரது தலைமையின் கீழ், இந்தியாவும் 2010 இல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

மறுபுறம், பாண்டிங் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை அடுத்தடுத்த ஒருநாள் உலகக் கோப்பை பட்டங்களை வெல்ல அணியை அழைத்துச் சென்றார்.

தோனியை விட வேறு எந்த கிரிக்கெட் வீரரும் ஒரு அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து அதிக போட்டிகளில் வழிநடத்தியது இல்லை. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தோனி 332 (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் உட்பட) போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார், இதில் இந்தியா 178 வென்றது, 120 தோல்வியடைந்தது. 6 சமநிலை மற்றும் 15 போட்டிகளில் டிரா செய்தது. தோனியின் ஒட்டுமொத்த வெற்றி சதவீதம் 53.61 என்பது இந்திய கேப்டன்களில் இரண்டாவது சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது. தற்போது விராட் கோலி (Virat Kohli) 64.64 என்ற வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளார்.

மறுபுறம், உலக கிரிக்கெட்டில் உள்ள அனைத்து கேப்டன்களிடையேயும் சிறந்த வெற்றி சதவீதத்தை பாண்டிங் கொண்டுள்ளார். பாண்டிங் (Ricky Ponting) ஆஸ்திரேலியாவை வழிநடத்திய 324 போட்டிகளில், அவர்கள் 220 போட்டிகளில் வென்றனர், வெறும் 77 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தனர், 2 போட்டி டையில் மற்றும் 13 டிரா ஆனது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *