இந்த சின்ன பையன பார்க்கும் போது பொலார்ட்ட பாத்த மாதிரியே இருக்கு; தமிழக வீரரை பாராட்டி பேசிய அனில் கும்ப்ளே !! 1

தமிழக இளம் வீரரான ஷாருக் கானின் பேட்டிங் ஸ்டைல் தனக்கு விண்டீஸ் அணியின் கீரன் பொலார்ட்டை நினைவுபடுத்துவதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சின்ன பையன பார்க்கும் போது பொலார்ட்ட பாத்த மாதிரியே இருக்கு; தமிழக வீரரை பாராட்டி பேசிய அனில் கும்ப்ளே !! 2

இந்த தொடரில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இளம் வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக் கான் முதன்மையான வீரராக உள்ளார்.

உள்ளூர் தொடர்களில் தமிழ்நாடு அணிக்காக வெறித்தனமாக விளையாடியதன் மூலம், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஷாருக் கான்.

இந்த சின்ன பையன பார்க்கும் போது பொலார்ட்ட பாத்த மாதிரியே இருக்கு; தமிழக வீரரை பாராட்டி பேசிய அனில் கும்ப்ளே !! 3

சமீபத்தில் நடந்து முடிந்த அனைத்து உள்ளூர் தொடர்களிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே ஷாருக் கானை, சமகால கிரிக்கெட் உலகின் அதிரடி நாயகனான கீரன் பொலார்டுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

ஷாருக் கான் குறித்து அனில் கும்ப்ளே பேசுகையில், “ஷாருக்கான் எனக்கு பொல்லார்டை நினைவுபடுத்துகிறார். நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடியபோது, நெட்டில் பொல்லார்டு அபாரமாக ஆடுவார்; அபாயகரமான வீரர் அவர். அவருக்கு நெட்டில் பந்துவீசியிருக்கிறேன். அப்போது, நான் அவரிடம்(பொல்லார்டு) சொல்லும் முதல் விஷயம் என்னவென்றால், ஸ்டிரைட்டில் ஆடவேண்டாம் என்பதுதான். ஆனால் இப்போது வயதாகிவிட்டதால் நெட்டில் பந்துவீசுவதில்லை. அதனால் ஷாருக்கானுக்கு நான் வீசவில்லை. ஆனால் ஷாருக்கான் எனக்கு பொல்லார்டை நினைவுபடுத்துகிறார் என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *