ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த ஷகிப் அல் ஹசன் தடை காலம் முடிந்ததும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி விளையாட உள்ளார்.
பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன்2019இல் ஐசிசியின் விதிமுறைகளை மீறி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன, இதனைத் தொடர்ந்து அவர் மீது ஐசிசி கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதனால் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் ஒரு வருடகால சஸ்பண்டுக்கு ஒத்துழைத்ததின் காரணமாக இந்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது என்று ஐசிசி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியில் சாகிப் அல் ஹஸன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பங்களாதேஷ் அணியின் தலைமைப் தேர்வாளரான மின்ஹாஜிமுல் ஆபிதீன் அவர்கள் கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது பங்களாதேஷின் நட்சத்திர வீரரான சாகிப் அல் ஹஸன் மீண்டும் aணிக்கு வந்தது சந்தோஷமான விஷயமாகும். மேலும் இவர் இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

மேலும் பங்களாதேஷ் அணியின் கேப்டனான தமீம் தனது அனுபவம் மற்றும்திறமையாலும் பங்களாதேஷ் அணியை மிக சிறப்பாக வழிநடத்துவார் என்று கூறினார்.
வரும் ஜனவரி 20ஆம் தேதி அன்று பங்களாதேஷில் உள்ள தாகா ஸ்டேடியத்தில் நடக்க உள்ள மூன்று ஒருநாள் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என பலரும் தனது கருத்தை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
பங்களாதேஷ் அணியின் 18 பேர் கொண்ட குழு
தமீம் இக்பால்(கே), ஷகிப் அல் ஹசன், நஜ்முல் ஹுசைன், ரஸ்கின் அஹமத், ரூபல் ஹூசைன் ,தைஜுள் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹதி ஹசன், ஹசன் மஹ்மூத், ஷரீபில் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், முஹம்மத் மிதுன், லிட்டன் தாஸ், மஹமதுள்ளாஹ், அஃபீப் ஹுசைன், சௌமியா சர்க்கர்