தென்ஆப்பிரிக்க வீரர்கள் உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் அதிரடியாக ஆடும் சாமி டேரன் சம்மி
தென் ஆப்பிரிக்கா அணிக்காக 1997 முதல் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் வேகப்பந்துவீச்சாளர் மகாயா நிடினி. இவர் தான் ஆடிய காலகட்டத்தில் தன்னுடன் ஆடிய சக வீரர்கள் தன்மீது நிறவெறியை மறைமுகமாகவும் நேரடியாகவும் காட்டியதாக சமீபத்தில் பேசி அம்பலப்படுத்தினார்.
நாங்கள் எல்லாம் ஒரே தேசிய கீதம் பாடுவோம். ஒரே சீருடை அணிந்து விளையாடுவோம். ஒரே இடத்தில் பயிற்சி செய்வோம். ஆனால், நிறைவேறி மட்டும் இருந்து கொண்டே இருந்தது பேருந்தில் நான் கடைசி சீட்டில் அமர்ந்து இருந்தால், சக வீரர்களின் அருகில் அமர மாட்டார்கள். இடைவெளிவிட்டு அமர்வார்கள்.
என் முன்னர்தான் அனைத்து திட்டங்களும் நடக்கும், இரவு உணவுக்கு செல்ல திட்டம் போடுவார்கள் என்று மட்டும் என்னை அழைக்க மாட்டார்கள். இதன் காரணமாக வீரர்களுடன் இருக்க முடியாமல் ஹோட்டல் அறைக்கும்,மைதானத்திற்கும் தனியே சென்று வந்தேன் என பல விஷயங்களைக் குறிப்பிட்டு அம்பலப்படுத்தினார்.
இந்நிலையில் ‘பிளாக் லைவ்ஸ்ஸ் மேட்டர்’ என்ற இயக்கத்திற்கு குரல் கொடுத்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி இந்த சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் பற்றி தாறுமாறாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…
Yow this is sad and here I was wanting to be as fit as Makhaya Ntini not knowing the reason for all this running to and from stadiums. Literally running away from loneliness. Shame on his teammates. You will always be a hero to us. #MakhayaNtini ✊?✊?✊?✊?✊? https://t.co/siQusV5esN
— Daren Sammy (@darensammy88) July 18, 2020
இது மிகவும் துயரமான செய்தியாக இருக்கிறது. இவரும் என்னை போல் பாதிக்கப்பட்டிருக்கிறார். தனிமையிலேயே இருந்துள்ளார். தனிமையில் இருந்து ஓடி ஒளிந்திருக்கிறார். அந்த குறிப்பிட்ட வீரர்களின் மீது இருந்த மதிப்பு போய்விட்டது அவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார் டேரன் சமி.