கிரிக்கெட் மைதானத்தில் மேஜிக் ஒன்றை நிகழ்த்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி.
பார்ல் ராக்ஸ் – டர்பன் ஹீட் அணிகளுக்கு இடையிலான தென் ஆப்பிரிக்க எம்.எஸ்.எல். டி20 போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காக விளையாடிய ஷம்சி, விஹாப் லுபேவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒரு விக்கெட்டை வீழ்த்திய பிறகு அதை விதவிதமாகக் கொண்டாடும் பந்துவீச்சாளர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ஷம்சி வித்தியாசமான முறையில் கொண்டாடி அசத்தினார்.
விக்கெட் விழுந்தவுடன் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிகப்பு கைக்குட்டையை வெளியில் எடுத்த ஷம்சி, அடுத்தக் கணமே குச்சியாக மாற்றி மேஜிக் செய்தார். அதை வைத்துக்கொண்டு
ஷம்சி கொண்டாடியதைக் கண்ட ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
எப்படி கைக்குட்டையை திடீரென குச்சியாக மாற்றினார் என வியந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இதனை அழகாக தனியே எடுத்து அணியின் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி இருக்கிறது.
WICKET!
A bit of magic from @shamsi90 ?
#MSLT20 pic.twitter.com/IxMqRYF1Ma— Mzansi Super League ? ?? ? (@MSL_T20) December 4, 2019
தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் மன்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் பார்ல் ராக்ஸ் மற்றும் டர்பன் ஹீட் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் பார்ல் ராக்ஸ் அணி பீல்டிங்கின் போது ஷம்சி பந்து வீசினார். அவரது பந்தில் எதிரணியின் விஹாப் லுப்பே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்த ஷம்ஷி, பாக்கெட்டில் இருந்த சிவப்பு நிற கைக்குட்டையை வெளியே எடுத்து உயரப் பிடித்தார். பின்னர், யாரும் எதிர்பார்க்காத விதமாக, அதனை பெரிய குச்சியாமாக மாற்றினார்.