ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வினின் சுழற் பந்துவீச்சு எடுபட வில்லை என்பதால் அவரை ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்குங்கள் என்று சிலர் விமர்சித்து வருகின்றனர், ஆனால் அஸ்வினை வெறுக்க கூடிய ஒருவராக இருந்தாலும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து அஸ்வினை நீக்குங்கள் என்று கூற மாட்டார்கள், ஏனென்றால் அஸ்வின் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மிகப் பெரும் பங்காற்றியுள்ளார்.

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழும் அஸ்வின் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவருடைய ஆல்ரவுண்டர் திறமையை பலரும் பாராட்டி உள்ளனர்.
இந்த நிலையில் சமகால கிரிக்கெட் தொடரின் சுழற்பந்து ஜாம்பவான்களாக திகழும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் நாதன் லியான் ஆகிய இருவர் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷான் வார்னே பாராட்டி பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், அஸ்வின் மற்றும் நாதன் லியான் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் நிச்சயம் என்னுடைய மற்றும் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகிய இருவருடைய சாதனையையும் முறியடிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன், ஏனென்றால் இந்த இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுமே தற்பொழுது மிகச் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர், ஒரு வேகப்பந்துவீச்சாளர் பந்து வீசும் பொழுது அதை பேட்ஸ்மேன்கள் எளிதாக கையாண்டு விடுவார்கள் ஆனால் அதையே ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் வீசும்போது நிச்சயம் பேட்ஸ்மேன் தடுமாறுவார்கள், இதன் காரணமாக இந்த இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுமே 1000 விக்கெட்களை எடுப்பார்கள், இதில் குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வருகிறார் என்று ஷேன் வார்னே பாராட்டிப் பேசியுள்ளார்.
நாதன் லயன் மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களுமே டெஸ்ட் போட்டியில் 400+ விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.