டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கெத்து காட்டுவதற்கு இவர் மட்டும் தான் காரணம்; சேன் வார்னே அதிரடி கருத்து !! 1

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

வெறும் மூன்று மாதங்களிலேயே இந்திய அணியின் அனைத்து விதமான கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொண்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி,கடந்த காலங்களில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் சிறந்த கேப்டனாகவும் இந்திய அணிக்கு பலமுறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

உலக கிரிக்கெட் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட்கோலி ஐசிசியால் நடத்தப்படும் போட்டிகளில் இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் பேட்டிங்கில் மோசமாக சொதப்புகிரார் என்ற விமர்சனத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கெத்து காட்டுவதற்கு இவர் மட்டும் தான் காரணம்; சேன் வார்னே அதிரடி கருத்து !! 2

குறிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அதற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார் என்னதான் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றாலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு சில முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்களுடைய விமர்சனங்கள் எல்லாம் நீர்த்துப் போகும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே விராட் கோலி குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கெத்து காட்டுவதற்கு இவர் மட்டும் தான் காரணம்; சேன் வார்னே அதிரடி கருத்து !! 3

அதில் பேசிய அவர், கடந்த காலங்களில் விராட்கோலி இந்திய அணிக்கு ஆற்றிய பங்கு மிகப்பெரியது, அதற்காக இந்திய அணி விராட் கோலிக்கு நன்றியை செலுத்த வேண்டும், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தலை சிறந்த அணியாக உருவாகியுள்ளது என்றால் அதற்கு பிசிசிஐயும் விராட் கோலியும் தான் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது, டெஸ்ட் போட்டி என்பது கிரிக்கெட் போட்டியிலேயே மிகவும் கடினமான ஒரு தொடராகும் ஆனால் அதிலும் இந்திய அணியை சர்வதேச கிரிக்கெட்டில் தலை சிறந்த அணியாக விராட்கோலி வழி நடத்தி கொண்டு சென்றுள்ளார், விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன் அவருடைய திட்டங்கள் மிகவும் அருமையாக இருக்கும் அவர் எப்பொழுதுமே சக வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று விராட் கோலி குறித்து ஷேன் வார்னே வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *