இந்தியாவின் அடுத்த மிகச் சிறந்த ஆல்ரவுண்டர், நிச்சயமாக இங்கிலாந்தில் அவர் ஜொலிப்பார்! பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் 1

ஷர்துல் தாகூர் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர், நிச்சயமாக இங்கிலாந்தில் அவர் ஜொலிப்பார்

இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தாகூர் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்று தற்போது அவரை புகழ்ந்து கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அதனை தொடர்ந்து நடக்க இருக்கின்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஆனால் ஷர்துல் தாகூர் இடம் பெற்றுள்ளார், நிச்சயமாக ஹர்திக் பாண்டியா இடத்தை தாகூர் பூர்த்தி செய்வார் என்றும் அவர் அடிப்படையில் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் பரத் அருண் கூறியுள்ளார்.

Shardul Thakur, Sanjay Manjrekar

ஹர்திக் பாண்டியா ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை

2018 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா தனது அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அதன் பின்னரே ஹர்திக் பாண்டியா பந்து வீசுவதில் சிரமப்படுகிறார். அந்த சிகிச்சைக்கு பிறகு அவ்வளவு எளிதாக யாரும் பந்துவீசி விட முடியாது. அவர் மீண்டும் சிறப்பாக பந்து வீச குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.

Shardul Thakur

எனினும் ஹர்திக் பாண்டியா சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் களம் இறங்கி மிக சிறப்பாகவே ஐக்கிய அரபு நாடுகளில் மும்பை அணிக்காக விளையாடினார். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடிய விளையாடினார். அதனைத் தொடர்ந்து தற்போது நடந்த பாதி ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடினார். எனினும் அவர் அவ்வளவாக பந்து வீசவில்லை என்பது குறிப்பிடதக்கது. முன்னர் குறிப்பிட்டது போல் அவர் பழையபடி பந்துவீச இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு தேனி எடுக்கப்படவில்லை என்று பரத் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

அவருக்கு மாற்று வீரராக மிக சிறப்பாக செயல்படும் தாகூர்

ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்புவதற்கு சிவம் டியூபே மற்றும் விஜய் சங்கர் ஆகியோரை நாங்கள் விளையாட வைத்தோம். ஆனால் அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தாகூர் சென்ற ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் மிக சிறப்பாக விளையாடினார். 67 ரன்கள் எடுத்தும் சரி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதிலும் சரி மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக தற்பொழுது உருமாறி இருக்கிறார் என்றே கூற வேண்டும்.

Hardik Pandya

குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மிக சிறப்பாக அவர் பந்து வீசியது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நிச்சயமாக அவரால் பவுலிங்கில் பேட்டிங்கிலும் சரி அணிக்கு தன்னுடைய முழு பங்களிப்பை அளிக்க முடியும். எனவே அவர் மீது நம்பிக்கை வைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. நிச்சயமாக அவர் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக தாகூர் வலம் வருவார் என்று பரத் அருண் இறுதியாக கூறி முடித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *