"விரைவில் வீரர்களின் மனைவிகளும் பேட்டிங் பவுலிங் செய்வார்கள்" - கிண்டலாக பதிலளித்த ரவி சாஸ்திரி 1

வீரர்களின் மனைவிகளுக்கு இடையே பிரச்சனை நடைபெறுவதால் அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என் பரவிய செய்திகளுக்கு பதில் அளித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தன. அதில் முதன்மையாக இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் மிகவும் கேள்விக்குறியாக இருந்தது தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.

அதன் பிறகு இந்திய அணியில் வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்ற தகவல்கள் பரவின. அடுத்ததாக கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை தொடரின் போது துணை கேப்டன் ரோகித் சர்மாவின் பேச்சிருக்கு கேப்டன் விராட் கோலி செவிசாய்க்கவில்லை. இதனால் அணியில் ஒற்றுமையின்மை ஏற்பட்டது என பரவின.

"விரைவில் வீரர்களின் மனைவிகளும் பேட்டிங் பவுலிங் செய்வார்கள்" - கிண்டலாக பதிலளித்த ரவி சாஸ்திரி 2

இவை அனைத்திற்கும் ஒரு படி மேலே, பிசிசிஐ வீரர்களை அவர்களின் மனைவிகளோடு இருக்க அனுமதிக்கவில்லை. கடைசி ஓரிரு வாரங்கள் மட்டுமே உடனிருக்க அனுமதித்தனர். இதனால் வீரர்களுக்கும் அவர்களின் மனைவிகளுக்கும இடையே பிரச்சினை ஏற்பட்டு, மன உளைச்சலால் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்ற கதைகளும் பரவின.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

"விரைவில் வீரர்களின் மனைவிகளும் பேட்டிங் பவுலிங் செய்வார்கள்" - கிண்டலாக பதிலளித்த ரவி சாஸ்திரி 3

அதில் வீரர்களின் மனைவிகளிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரவிசாஸ்திரி, “முதலில் வீரர்களுக்கு இடையே பிரச்சனை என்றார்கள். அடுத்ததாக, மனைவிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே பிரச்சனை என்றார்கள். இனி வீரர்கள் ஆட மாட்டார்கள் அவர்களுக்கு பதிலாக அவர்களது மனைவிகளே பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார்கள் என வதந்திகளை பரப்பி விடுவார்கள்” என கிண்டலாக பதில் அளித்தார்.

இவரின் இந்த பதிலுக்கு கேப்டன் விராட்கோலி உட்பட அரங்கில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *