எனக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டீங்களா..? இந்திய அணியிடம் கேள்வி கேட்கும் இளம் வீரர்
இந்திய ஏ அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவது குறித்து இளம் வீரரான செல்டன் ஜாக்சன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ரஞ்சி சீசனில் 854 ரன்கள் எடுத்தும் இந்தியா ஏ அணியிலோ, துலீப் கோப்பை அணியிலோ தேர்வு செய்யப்படாதது ஏன், எங்களிடம் என்ன குறை என்பதை தெரியப்படுத்துவது அவசியம் என சவுராஷ்டிரா கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷெல்டன் ஜாக்சன் தன் ட்விட்டர் பக்கத்தில், “சவுராஷ்டிரா ரஞ்சி இறுதியில் இந்த ஆண்டு ஆடியது, வீரர்கள் நன்றாக ஆடி நிரூபித்தாலும் இந்திய ஏ தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை, ரஞ்சி ட்ராபி இறுதியில் ஆடினாலும் அதன் முக்கியத்துவம் பூஜ்ஜியமே… அல்லது சிறிய அணிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா தெரியவில்லை ஏனெனில் சவுராஷ்ட்ரா அணி கடந்த 5 ஆண்டுகளில் 3 இறுதிப் போட்டிகளில் சிதான்ஷு கோடக் பயிற்சியின் கீழ் ஆடியுள்ளது. எங்களிடம் சில நல்ல ஆட்டக்காரர்கள்பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் உள்ளனர், ஆனால் இவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டு வருகிறது.

என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறுகின்றனர், ஆனால் நாங்கல் இந்த அருமையான அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்து ஆடி வருகிறோம், ஆகவே வீரர்களாக நாங்கள் எங்கு சோடைபோகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அல்லது எங்கள் கிரிக்கெட் வாழ்க்கை இப்படியே முடிந்து விட வேண்டுமா என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கடுமையாக கேள்வி கேட்டுள்ளார் ஷெல்டன் ஜாக்சன்.
கடந்த ரஞ்சி சீசனில் ஷெல்டன் ஜாக்சன் 7 அரைசதங்கள், 2 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்கால் வீரர் மனோஜ் திவாரி, இவரும் இன்னொரு விரக்தியடைந்த வீரராவார், இவர் ஷெல்டன் ஜாக்சனுக்கு ஆதரவாக, “உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது ஷெல்டன். உங்கள் விரக்தி நியாயமானதே. ஆனாலும் தொடருங்கள், கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
1/1 Saurashtra has played the ranji trophy finals this year, and surprisingly still no player even after performing at all platforms, dont get picked for the A series. so is the importance of playing the Ranji trophy finals zero.
— Sheldon Jackson (@ShelJackson27) September 2, 2019
இதனையடுத்து பிசிசிஐ அதிகாரியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட அவர், “உள்நாட்டு வீரர்கள் போல் தேர்வாளர்கள் சுதந்திரமாக பதில் அளித்து விட முடியாது, அவர்கள் ஒப்பந்தம் அப்படி. நிர்வாகக் குழுவான சிஓஏதான் வீரர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்து கொள்கைகளை வகுக்க வேண்டும்” என்றார்.
2/2 or is that small state sides arnt taken seriously coz in the last 5 years @saucricket has played 3 finals under sitanshu kotaks coaching, (we have some very good performers since recent years with the bat and ball. ) but not got the deserved credit.
— Sheldon Jackson (@ShelJackson27) September 2, 2019