நீங்கள் அடுத்த கேப்டனாக வர வாய்ப்பிருக்கிறது, பயன்படுத்திக்கொள்ளுங்கள்! முன்னாள் வீரர் அட்வைஸ் 1

ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் துவங்குகிறது. அதில் முதலில் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இன்று இந்திய நேர அளவில் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணியில் எத்தனை புதுமுக வீரர்கள் களம் இறங்க போகின்றனர் என்கிற ஆர்வம் பல இந்தியர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்திய முன்னாள் வீரரும் முன்னாள் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளருமான ராமன் தவான் இலங்கைக்கு எதிரான தொடரில் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Shikhar Dhawan

உலகக் கோப்பை டி20 தொடர் குறித்த எண்ணம் இருக்க வேண்டும்

தற்பொழுது உலகக்கோப்பை டி20 தொடரில் ஓபனிங் வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் விளையாடவே அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு முன்னர் நடந்த ஐசிசி சர்வதேச தொடர்களில் ஷிகர் தவான் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார். எனவே அவரது பெயரும் உலக கோப்பை டி20 தொடரில் இடம் பெறும். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் மிகச்சிறப்பாக ஷிகர் தவான் விளையாடினார். இருப்பினும் அவர் தன்னுடைய இடத்தை இந்திய தேர்வு குழு மத்தியில் நன்கு தடம் பதிக்க வேண்டும்.

இந்திய அணியை இரண்டு தொடர்களில் தலைமை தாங்க இருக்கிறார். இது அவருக்கு கிடைத்திருக்கும் சரியான வாய்ப்பு. இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு நிச்சயமாக அவருக்கு கிடைக்கும். மிக அற்புதமாக விளையாடினால் நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடரில் ஓபனிங் வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் ராமன் வலியுறுத்தியுள்ளார்.

நீங்கள் அடுத்த கேப்டனாக வர வாய்ப்பிருக்கிறது, பயன்படுத்திக்கொள்ளுங்கள்! முன்னாள் வீரர் அட்வைஸ் 2

அர்ஜுனா ரணதுங்கா வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும்

அர்ஜூன ரணதுங்கா இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறை கூறி இருந்தார். அனுபவம் இல்லாத வீரர்களை இலங்கைக்கு எதிராக விளையாட வைப்பது எங்களை அவமதிப்பது போல் உள்ளது என்று சில வாரங்களுக்கு முன்பாக கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு தகுந்த விளக்கத்தை அளித்து.

இந்நிலையில் தற்பொழுது ராமன், இலங்கைக்கு மிக சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரை கைப்பற்றி கொடுத்தவர் அர்ஜுன ரணதுங்கா. நிறைய அனுபவம் இருக்கும் ஒரு வீரர் இப்படி வெளிப்படையாக குறை கூறுவது அழகல்ல என்றும், தனது வார்த்தைகளை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் ராமன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *