2013 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின்போது எனக்கு தோனி பக்கபலமாக இருந்தார் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்பு, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 2013 ஆம் ஆண்டு பங்கேற்றது. அந்தத் தொடரில் எந்த அணியுடனும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டி வரை சென்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
சாம்பியன்ஸ் கோப்பை நினைவுகளை பகிர்ந்த ஷிகர் தவான் “சாம்பியன்ஸ் கோப்பை வார்ம் அப் போட்டிகளில் என்னால் ரன்களை சேகரிக்க முடியவில்லை. ஆனாலும் எனக்கு சாம்பியன்ஸ் கோப்பையின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட தோனி வாய்ப்பு தந்தார். எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை கொடுத்தார்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பாகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு வந்த இந்து அகதிகளைச் சந்தித்து கிரிக்கெட் உபகரணங்களை வழங்கியுள்ளார்.
டெல்லியில் உள்ள மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே, பாகிஸ்தானில் இருந்து வந்த ஏராளனமான இந்து அகதிகள் தங்கியுள்ளனர். அந்த அகதிகளை டெல்லி ரைடிங் கிளப் எனற அறக்கட்டளை கவனித்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று அவர்களைச் சந்தித்த இந்திய வீரர் ஷிகர் தவான் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கியதோடு, அங்கு நவீன கழிப்பறைகள் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இது மட்டுமன்றி அங்குள்ள சிறுவர்களைச் சந்தித்த தவான் அவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷிகர் தவான் “ எனது காலையை மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே தங்கியிருந்த அகதிகளுடன் கழித்தேன். அவர்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேசிய ஷிகர் தவான் “எனது நண்பர் இந்த அகதிகள் முகாமில் பணிபுரிகிறார். அவர் இங்கு மரங்கள் நட்டார். அகதிகளுக்கான கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்தார்.

இந்த ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு கிடைக்கவும் வழிவகை செய்தார். இதனை பார்த்த நான் இவர்களுக்கு என்னால் முடிந்த அளவிலான உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் நான் அங்குள்ள சிறுவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினேன். என்னை அவர்களுக்கு உதவி செய்யும் இடத்தில் வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். எனது ஸ்பான்ஸரிடமும் அவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யுமாறு கூறியிருக்கிறேன்” என்று கூறினார்.