வீடியோ: பாட்டில் சேலஞ்சில் கெத்து காட்டிய ஷிகர் தவான்!! 1

உலக அளவில் ட்ரெண்டான பாட்டில் சேலஞ்சை தற்போது ஷிகர் தவானும் செய்து விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

“பாட்டில் சேலஞ்ச்” என்ற பெயரில் உலக அளவில் ட்ரெண்டாகி வரும் இந்த சேலஞ்சை பல பிரபலங்கள் செய்து வருகின்றனர். அதாவது, பாட்டிலின் மூடியை கையால் தொடாமலேயே வேறு விதமாக தங்களுக்கு உரிய பிரத்தியேக பாணியில் திறந்து, அதனை விடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோக்களை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

வீடியோ: பாட்டில் சேலஞ்சில் கெத்து காட்டிய ஷிகர் தவான்!! 2

ஏற்கனவே, பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இந்த சேலஞ்சை செய்து வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், சேலஞ்சை முடித்துவிட்டு, பாட்டில் சேலஞ்ச்சில் பங்கேற்க ஷிகர் தவானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். யுவராஜ் சிங் விடுத்த சவாலை ஏற்ற ஷிகர் தவான், அதனை இன்று நிகழ்த்தி விடியோவாக பதிவு செய்து, தனது ட்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டார்.

வீடியோ: பாட்டில் சேலஞ்சில் கெத்து காட்டிய ஷிகர் தவான்!! 3

மஞ்சள் நிற டென்னிஸ் பந்தை தமது பேட்டினால் அடித்து எதிரே வைக்கப்பட்டிருந்த பாட்டிலின் மூடியை திறக்கும் வீடியோ காட்சியை, தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தவான், தமக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த யுவராஜ் சிங்கிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தவான் இந்த சேலஞ்சு செய்வதற்கு வேறு யாரையும் அழைக்கவில்லை. ஆதலால், இது இதோடு முடியுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

கட்டைவிரல் காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய தவான், தற்போது நன்கு குணமடைந்துள்ளார். இன்று அறிவிக்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *