காரணம் கேட்டா சிரிப்பீங்க; உலகக்கோப்பை டீம்ல இருந்து விண்டீஸ் வீரர் நீக்கம்! 'வீட்லயே இருங்க' ஊரிலேயே விட்டுச்சென்ற கிரிக்கெட் வாரியம்! 1

விமானத்தை தவறவிட்டதால் டி20 உலக கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் சிம்ரன் ஹெட்மயர். அவருக்கு பதிலாக மாற்று வீரரையும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் சிம்ரன் ஹெட்மயர். பிரிமியர் லீக் தொடர் முடிவுற்றவுடன் அக்டோபர் 1ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா புறப்பட்டனர். டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் சிம்ரன் ஹெட்மயர் சக வீரர்களுடன் செல்லவில்லை.

காரணம் கேட்டா சிரிப்பீங்க; உலகக்கோப்பை டீம்ல இருந்து விண்டீஸ் வீரர் நீக்கம்! 'வீட்லயே இருங்க' ஊரிலேயே விட்டுச்சென்ற கிரிக்கெட் வாரியம்! 2

தனது தனிப்பட்ட காரணத்திற்காக அவர் சில நாட்கள் அவகாசம் கேட்டு இருந்தார். ஆகையால் அக்டோபர் மூன்றாம் தேதி மாலை வேறொரு விமானத்தில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உரிய நேரத்தில் அந்த விமானத்திலும் சிம்ரன் ஹெட்மயர் பயணிக்கவில்லை என்பதால் உடனடியாக டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து சிம்ரன் ஹெட்மயர் நீக்கப்படுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

இவரது நீக்கம் குறித்து அவர் அளித்த பேட்டியில், சிம்ரன் ஹெட்மயர் டி20 உலக கோப்பை அணியிலிருந்து நீக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுத்தேன். முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக சக அணி வீரர்களுடன் செல்ல முடியவில்லை சில நாட்கள் வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு ஏற்றார் போல வேறு ஒரு நாளில் அவர் பயணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் அவர் செல்லவில்லை என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு மாற்று வீரராக சம்ரா ப்ரூப்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைகிறார். சர்வதேச கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. அதற்கு முன்பாக வீரர்கள் உரிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதில் எங்களுக்கு எந்தவித சமரசமும் கிடையாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

காரணம் கேட்டா சிரிப்பீங்க; உலகக்கோப்பை டீம்ல இருந்து விண்டீஸ் வீரர் நீக்கம்! 'வீட்லயே இருங்க' ஊரிலேயே விட்டுச்சென்ற கிரிக்கெட் வாரியம்! 3

மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டுள்ள ப்ரூக்ஸ் பற்றி பேசிய அவர், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ப்ரூப்ஸ் விளையாடிய விதம் எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. ஆகையால் மாற்று வீரராக இவர் சரியாக இருப்பார் என உடனடியாக தேர்ந்தெடுத்து விட்டோம் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *