இவுங்க இல்லாம எப்படிடா ஜெயிக்க போறீங்க..? இரண்டு மிக முக்கிய வீரர்களுக்கே இடம் இல்லை; ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு
இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 27ம் தேதி துவங்க உள்ளது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
விண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்களான நிக்கோலஸ் பூரண் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்தும் புறக்கணிப்பட்டுள்ளனர்.
சாய் ஹோப் தலைமையிலான விண்டீஸ் அணியில், சிம்ரன் ஹெட்மயர், அல்ஜாரி ஜோசப், ஓசோன் தாம்ஸ், கெய்ல் மெயர்ஸ் போன்ற சீனியர் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

இது தவிர ரோவ்மன் பவல், அதான்சே, டிராக்ஸ், பிராண்டன் கிங் போன்ற வீரர்களும் இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணி;
சாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதான்சே, யானிக் சாரியாக், கேசி சார்டி, டாமினிக் டிராக்ஸ், சிம்ரன் ஹெட்மயர், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கெய்ல் மெயர்ஸ், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சியல்ஸ், ரோமரியோ செஃபர்ட், கெவின், ஓசோன் தாமஸ்.