அவர் பக்கத்துல எல்லாம் யாராலயும் வர முடியாது! இந்திய வீரரை புகழ்ந்து தள்ளும் சோயிப் அக்தர்!
சமீபகாலமாக சோயிப் அக்தர் இந்திய வீரர்களை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவருடன் சமகாலத்தில் ஆடிய வீரர்களை விமர்சித்தாலும்,தற்போது ஆடிக்கொண்டிருக்கும் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி ஆகிய பல இந்திய வீரர்களை மனம் வந்து வந்து புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
இதற்காக சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும் அதனை எல்லாம் தூக்கி வீசிவிட்டு நான் அப்படித்தான் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் சோயிப் அக்தர். தற்போது இவருக்கு 46 வயதாகிறது ஒரு யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். அதில் உலகில் தற்போது உள்ள மிகச்சிறந்த வீரர் விராட் கோலி தான் மற்ற வீரர்கள் எல்லாம் அவர் பக்கத்தில் கூட வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதில் ஸ்டீபன் ஸ்மித், கேன் வில்லியம்சன், பாபர் அசாம், ஜோ ரூட் போன்ற வீரர்களும் அடக்கம். இவர்களுக்கு எல்லாம் பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறார் விராட் கோலி என்று தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் நான் ஏன் விராட் கோலியை பாராட்டி பேசக்கூடாது.அவர் இந்திய வீரர் என்பதாலா?
நீங்கள் சொல்லுங்கள் பாகிஸ்தான் அல்லது தற்போது இருக்கும் சர்வதேச கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பக்கத்தில் யார் வருவார்கள். ஏன் மக்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கோபம் கொள்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னை விமர்சிப்பதற்கு முன்னால் விராட் கோலியின் புள்ளி விவரங்களைப் பாருங்கள். ஒரு காலகட்டத்தில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
தற்போதெல்லாம் அதனையும் தாண்டி எங்கேயோ சென்று விட்டார்கள். அந்த அளவிற்கு தான் நாம் இருக்கிறோம் விராட் கோலி தான் உலகின் மிகச்சிறந்த வீரர் என்று தெரிவித்திருக்கிறார். இவர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறும்போது உலகின் மிகச் சிறந்த கேப்டன் இவர்தான். எல்லாவிதமான கோப்பைகளை வென்றுள்ளது உனக்கு ஒரு மிகச்சிறந்த பிரியாவிடை போட்டியை நடத்த வேண்டும் என்று கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.