சோயப் மாலிக் டி20 போட்டிகளில் 100 போட்டிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷாஹித் அப்ரிடி யும், மூன்றாம் இடத்தில் தோனியும் உள்ளனர்.
100 டி20 போட்டிகள் ஆடிய முதல் வீரர்
பாக்கிஸ்தான் வீரர் சோயப் மாலிக் டி20 போட்டிகளில் இதுவரை 100 போட்டிகளில் ஆடி புதிய சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக சக அணி வீரரான ஷாஹித் அப்ரிடி 99 போட்டிகள் ஆடி இரண்டாம் இடத்தில உள்ளார். மூன்றாவது இடத்தில் 90 போட்டிகளுடன் இந்திய அணி வீரர் தோனி உள்ளார்.
பாக்கிஸ்தான் அணியில் 12 ஆண்டுகளாக டி20 போட்டிகள் ஆடி வரும் மாலிக், 2006ம் ஆண்டு தனது முதல் போட்டியை ஆடினார். இவர் பாக்கிஸ்தான் அணிக்காக 23 போட்டிகள் கேப்டன் பொறுப்பில் இருந்துள்ளார். வரும் உலகக்கோப்பையுடன் ஆர் ஓய்வு பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் 2000 ரன்கள்..
மாலிக் டி20 போட்டிகளில் 2000 ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் ஆவார். மேலும், 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 35 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள மாலிக் 1,898 ரன்களும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 261 போட்டிகள் ஆடியுள்ள இவர் 6,975 ரன்களும், 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் பல நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளையும் ஆடியுள்ளார். குறிப்பாக ஐபில் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் முதல் சீசனில் ஆடியுள்ளார்.