விராட் கோலி, முகமது சமி

இந்திய அணியின் மூத்த வீரர் வங்கதேச ஒருநாள் தொடரிலிருந்து திடீரென விலகி இருக்கிறார்.

வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்குகிறது. அதன் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி டிசம்பர் 1ஆம் தேதி வங்கதேசம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

விராட் கோலி, ரோகித் சர்மா

நியூசிலாந்து அணியுடன் நடந்த தொடரில் மூத்த வீரர்கள் கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட சிலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

வங்கதேச ஒருநாள் தொடரில் டி20 போட்டிகளில் இடைவிடாமல் விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி, முகமது சமி

டி20 உலக கோப்பைக்கு முன்பாக திடீரென காயம் ஏற்பட்டு விலகி இருந்த ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரிலும் இடம்பெறாததால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஜடேஜாவும் அணியில் இடம்பெற்று பின்னர் காயம் காரணமாக விலகி இருப்பது கூடுதல் பின்னடைவை கொடுத்திருக்கிறது.

ஜடேஜாவுக்கு மாற்று வீரராக சபாஷ் அகமது உள்ளே எடுத்து வரப்பட்டுவிட்டார். பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத சூழலில் முகமது சமி இடம்பெற்று இருந்தது சற்று நம்பிக்கையை அளித்தது.

Shami

ஆனால் பயிற்சியின் போது சமிக்கு ஏற்பட்ட காயத்தினால் தற்போது ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார் என்ற தகவல்கள் அணி நிர்வாக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காயத்தை பற்றி இந்திய அணியின் மருத்துவர்கள் தற்போது வரை எந்தவித தகவல்களையும் வெளிவிடவில்லை.

பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கையில் சற்று தீவிரமாக காயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவருக்கு கையில் அடிபட்டிருந்தது. மீண்டும் அதே பகுதியில் அடிபட்டிருப்பதால் சற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

தற்போது வரை இவருக்கான மாற்று வீரரை இந்திய அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை. போட்டி நடைபெறுவதற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே மீதம் இருக்கிறது அதற்குள் யாரை மாற்று வீரராக அறிவிப்பர் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *