பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சொஹைல் தன்வீர், ஏபி டிவில்லியர்ஸ் பந்துவீசி என்பது மிகக் கடினமான விஷயமாகும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி இடது கை வேகப்பந்து வீச்சாளரான தன்வீர் தனது அணிக்காக பலமுறை அபாரமாக பந்து வீசி பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இவருடைய வித்தியசமான பந்து வீச்சு பல பேட்ஸ்மேன்களை ப முறை திணறடித்தள்ளது.

சமீபகாலமாக எந்த போட்டியிலும் பங்கேற்காத இவர் வருகின்ற t20 உலகக் கோப்பை பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பல ஜாம்பவான்கள் திணறினார்கள்.
2008 ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்டுகளை எடுத்து 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் இது மிகப்பெரிய சாதனையாக இன்றளவும் கருதப்படுகிறது.

சொஹைல் தன்வீர் தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது சவுத்ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேனான mr.360 என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் ஒரு மிக சிறந்த வீரர். அவரை அவுட் செய்வது என்பது மிக சாதாரணமான விஷயம் கிடையாது என்று கூறியுள்ளார்.
சொஹைல் தன்வீர் கடைசியாக 2017 வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார் பின் இடைப்பட்ட காலமாக அவர் எந்த போட்டியில் பங்கேற்கவில்லை வருகிற 2021 டி-20 உலகக்கோப்பையோடு இவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி அவர் கூறியதாவது என்னுடைய இலக்கு என்பது 2021 உலக கோப்பை வெற்றி பெறுவதாகும். நான் பந்துவீச்சில் சர்வதேச டி20 போட்டியில் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தானில் நம்பர் ஒன்றாகவும் திகழ்கிறேன். நிச்சயமாக 20 ஓவர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவேன் என்று அவர் கூறினார்.