என்கிட்ட கூட எதுவும் சொல்லலையே; கங்குலி மீது மம்தா பானர்ஜி அதிருப்தி !! 1
Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee with former cricketer & CAB President Sourav Ganguly lighting lamps at the Annual Awards Ceremony of Cricket Association of Bengal (CAB) in Kolkata on Tuesday. PTI Photo by Ashok Bhaumik (PTI8_8_2017_000066A)

என்கிட்ட கூட எதுவும் சொல்லலையே; கங்குலி மீது மம்தா பானர்ஜி அதிருப்தி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியை தகவல் ஏதுமின்றி ரத்து செய்ததால் கங்குலி மீது மம்தா பானர்ஜி அதிருப்தியில் உள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. முதல் போட்டி 12-ந்தேதி இமாச்சால பிரதேசத்தில் நடக்க இருந்தது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

2-வது போட்டி லக்னோவிலும், 3-வது போட்டி கொல்கத்தாவிலும் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக 2-வது மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி ரத்து செய்தது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டி எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி மீது மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

என்கிட்ட கூட எதுவும் சொல்லலையே; கங்குலி மீது மம்தா பானர்ஜி அதிருப்தி !! 2

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘கவுரவ் கங்குலியுடன் எல்லா விஷயங்களும் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஏதும் செய்யவில்லை. கொல்கத்தாவில் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொல்கத்தா போலீஸ் தலைமையிடமாவது தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

என்கிட்ட கூட எதுவும் சொல்லலையே; கங்குலி மீது மம்தா பானர்ஜி அதிருப்தி !! 3

மாநில தலைமை செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் அல்லது போலீஸ் கமிஷனர் ஆகியோரில் ஒருவரிடமாவது ஏன் சொல்லியிருக்கக் கூடாது?. ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதன்பிறகு எங்களுக்கு தெரிவித்தால் என்ன அர்த்தம். நாங்கள் உங்களிடம் போட்டியை ரத்து செய்ய கேட்கவில்லை. இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *