பாவம்யா இந்த மனுஷன்... ஆபரேஷன் செய்துகொண்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்படியொரு நிலைமை - பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்த தகவல்! 1

ஷ்ரேயாஸ் ஐயர் தனது காயத்திலிருந்து குணமடைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது? என்பது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரி ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக மிகப்பெரிய தொடர்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் ஆசியக்கோப்பை தொடர், அதைத்தொடர்ந்து அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் என இடைவிடாமல் நடக்கிறது.

அக்டோபர் ஐந்து முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இன்னும் நூறு நாட்களுக்கும் குறைவாகவே இருக்கிறது.

பாவம்யா இந்த மனுஷன்... ஆபரேஷன் செய்துகொண்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்படியொரு நிலைமை - பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்த தகவல்! 2

இந்திய அணி வருகிற ஜூலை 10ஆம் தேதிக்கு மேல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் முன்னணி இந்திய வீரர்கள் சிலர் இடம்பெறவில்லை காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கும் பும்ரா, தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் குணமடைந்து வருகிறார். அவருக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்று அதில் உடல்தகுதியை பெற்றபின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார். அனேகமாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாட வைக்கப்படலாம் என்றும் கூறினார்.

பாவம்யா இந்த மனுஷன்... ஆபரேஷன் செய்துகொண்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்படியொரு நிலைமை - பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்த தகவல்! 3

கேஎல் ராகுல் விஷயத்தில் காயம் வேகமாக குணமடைந்து வருவதாகவும் ஆசியகோப்பைக்கு முன்பு குணமடைந்து விடுவார் மீண்டும் இந்திய அணிக்கு வந்து விடுவார் என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் அறுவைசிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு விரைவாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பினார். சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருதாக தகவல்கள் வந்தது. அதைப் பற்றி பேசிய தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரி கூறுகையில்,

ஷ்ரேயாஸ் ஐயர் விஷயம் தான் சற்று கவலையாக இருக்கிறது. அவர் குணமடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் குறிப்பிட்ட நாட்களுக்குள் குணமடைந்து விடுவார் என்று கூற இயலாது. அனேகமாக உலக கோப்பைக்குள் குணமடைவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையை வைத்துப்பார்க்கையில் சற்று சந்தேகமாக தான் இருக்கிறது. உலகக்கோப்பையில் விளையாடாமல் விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அதிகாரி கூறிய தகவல் பெருத்த இடியை கொடுத்திருக்கிறது.

பாவம்யா இந்த மனுஷன்... ஆபரேஷன் செய்துகொண்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்படியொரு நிலைமை - பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்த தகவல்! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *