சிறிது நாளுக்கு முன்பு தான் அனைவரும் எதிர்பார்த்த பெரிய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று இந்திய வீரர்கள் கொண்டாடினர். மீண்டும் ஒரு நற்செய்தியை இந்திய அணி பெற்றது. இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இலங்கையுடன் விளையாடப்போகும் போட்டிக்கு இந்திய வீரர்கள் பயிற்சி எடுத்திருந்த போது, இந்த தகவலை பெற்றார் ரவீந்திர ஜடேஜா.
தனிப்பட்ட வாழ்க்கையின் முன் தேசிய கடமையைச் செய்வதன் மூலம் அவரது பிரசவ தேதிக்கு முன் இந்திய அணியுடன் இங்கிலாந்து சென்றடைந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் ஜடேஜாவுக்கும் அவரது மனைவிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு காதல் கதை எல்லாம் ஒன்றுமில்லை.
இருவரும் வாட்சப்பில் பேசி தான் பழகினார்கள். ஒரு வெற்றியாளன் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவார்கள். அதேதான் ரவீந்திர ஜடேஜாவுக்கும்.
முதலில் தேசிய கடமை:
ஜடேஜாவிடம் இதை பற்றி கேட்ட போது,”என் மனைவியின் பிரசவத்திற்கு நான் சென்றிருக்கவேண்டும். ஆனால், நான் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் நான் விளையாட வேண்டும். என்னுடைய குடும்பம் என் மனைவியை கவனிப்பார்கள், அவர்களும் நான் இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்று தான் நினைத்தார்கள். அதனால் தான் நானும் அதே முடிவு எடுத்தேன்,” என்று ஜடேஜா கூறினார்.
இலங்கைக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு விமானத்தை பிடித்து இந்தியாவிற்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தையை பார்த்தால் சுவாரசியமாக இருக்கும். ஆனால், தற்போது இலங்கையிடம் வென்று 4 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி படுத்தி ஜடேஜாவின் குழந்தைக்கு இதை பரிசாக அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.