தென்னாபிரிக்கா டி20 தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டி20 போட்டிக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பும்ரா, முதுகு பகுதியில் வலி அதிகமாக இருப்பதாக அங்கிருந்த மருத்துவ குழுவிடம் ஆலோசித்து இருக்கிறார். உடனடியாக பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருக்கு காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் சில காலம் இவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான தகவலும் பிசிசிஐ இடம் தெரியப்படுத்தப்பட்டது.
இதை அறிந்தவுடன் முதல் டி20 போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்தது. பின்னர் பரிசோதனை மேற்கொண்டபோது இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேலை அறுவை சிகிச்சை செய்வது உறுதியானால் கிட்டத்தட்ட 4 முதல் 6 மாத காலம் இவரால் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்று தெரிய வந்திருக்கிறது.
டி20 உலக கோப்பை தொடரிலும் இவர் விளையாட மாட்டார் என்ற மற்றொருபுற தகவல்களும் வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து பும்ரா விலகியதால், அவருக்கு மாற்று வீரராக யார் உள்ளே எடுத்து வரப்படுவார்? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அந்த வரிசையில் ஆவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ் இருவரின் பெயர் அடிபட்டது. ஆவேஷ் ஆசியகோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. ஆகையால் முகமது சிராஜ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்கா தொடரில் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் இவர் விளையாடுவார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
டி20 உலக கோப்பை தொடரில் பும்ரா இருப்பாரா? மாட்டாரா? என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முகமது சமி மற்றும் தீபக் சகர் இருவரும் டி20 உலக கோப்பை அணியில் ரிசர்வ் வீரர்களாக வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பும்ராவிற்கு மாற்று வீரராக விளையாடலாம்.
ஏற்கனவே ஜடேஜா காயம் காரணமாக வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை தந்திருக்கிறது. தற்போது பும்ராவும் காயம் காரணமாக சந்தேகத்தில் இருப்பதால் இந்திய அணி உலககோப்பை தொடருக்கு முன்னமே சற்று பின்னடைவை சந்தித்து இருப்பதாக பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
🚨 NEWS 🚨: Mohd. Siraj replaces injured Jasprit Bumrah in T20I squad. #TeamIndia | #INDvSA
More Details 🔽https://t.co/o1HvH9XqcI
— BCCI (@BCCI) September 30, 2022