ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்க்கும் (ACA), ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திற்க்கும் இடையேயான ஊதியம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையில் தீர்வு காணப்பட்டதாக தெரிகிறது. இந்த விவாத காலங்களில் ஆதர்வளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

” மிகவும் மகிழ்ச்சியான தருணம், இது இந்த ஊதிய ஒப்பந்தத்தை பேரம் செய்து வேண்டியதை பெற்றது மிகவும் நன்மை பயக்கும், இதை பெறுவது மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது. இதே நேரத்தில் நாங்கள் அனைவரும் மீண்டும் இணைந்து நாங்கள் நேசிக்கும் விளையாட்டை விளையாடுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த ,அவருடைய செய்தியில் இணைப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது :
1/2 Great to get a deal done! It's been a long and challenging process and it's great that we can now get on with playing the game that we
— Steve Smith (@stevesmith49) August 3, 2017
2/3 all love. I'd like to thank the ACA for negotiating on behalf of the players and I'm excited that we can all start working together
— Steve Smith (@stevesmith49) August 3, 2017
3/3 again to continue to grow our great game. I look forward to Bangladesh, India and an exciting summer of Ashes cricket
— Steve Smith (@stevesmith49) August 3, 2017
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கும் இடையே ஊதியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. நாங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும் வரை போராடுவோம். ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்கலாம் என்று துணை கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 1-ந்தேதியில் இருந்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காததால், 6 மாதம் தடையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆஸ்திரேலிய வீரர்கள் (ஒப்பந்தத்தில் ஈடுபடாத வீரர்கள் உள்பட) ஐ.சி.சி. ஒப்புதலுடன் நடைபெறும் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாட முடியாது. அதில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதேபோல் காட்சி கிரிக்கெட்டிலும் விளையாட 6 மாதத்திற்கு அனுமதி வழங்க இயலாது.
ஜூன் 30-ந்தேதியுடன் வீரர்களின் ஒப்பந்தம் முடிவடைகிறது. அதன்பின் அவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஊழியர்கள் கிடையாது. அது போலவே அவர்களும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் தங்கள் பங்கிற்க்கு டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் , ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் நாங்கள் இனிமேல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஊழியர்கள் கிடையாது எனவும் , நாங்கள் இப்ப்போது வேலை இல்லாதவர்கள் எனவும் செய்தி வெளியிட்டு இருந்தனர். ஒப்பந்தத்தின் காலாவதி நாள் முடிந்தும் ஒப்பந்தம் இறுதியாகாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் வேலையிழந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சம்பளம் தவிர கிரிக்கெட் வாரிய வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வீரர்களுக்கு வழங்கி வரும் பழைய நடைமுறையை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வருவாய் பகிர்வு முறை தொடர வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் உறுதியாக இருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர மறுப்பதால் ஒப்பந்த விவகாரத்தில் இழுபறி தொடருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில், தென்னாப்பிரிக்காவுடனான தொடரை புறக்கணிப்பது தொடர்பாக என் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். எல்லா வீரர்களின் நலன் கருதி தங்களது சொந்த லட்சியத்தை தியாகம் செய்து ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவர்களின் இந்த தன்னலமற்ற செயல் வீரர்கள் இடையே இருக்கும் ஒற்றுமையையும், அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பிடிவாதமாக போக்கு எல்லா வீரர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பின்னர் இந்த பிரச்சனை தற்போது முடிவிற்க்கு வந்துள்ளது, ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் (ACA- Australian Players Association) வைத்தை கோரிக்கைகளை ஏற்ப்பதாக அந்நாட்டு கிரிகெட் வாரியம் (CA – Cricket Australia) அறிவித்துள்ளது.
ஆஸ்திரலிய கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது :
விவாதத்தின் முக்கியமான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டது. வீரர்கள் ஊதியம் பெரும் பழைய முறையே நீடிக்கும், என் அறிவித்தார்.