நான்கு வருடங்களுக்கு பிறகு மிகப்பெரும் அசிங்கத்தில் இருந்து மீண்ட இலங்கை அணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !! 1

நான்கு வருடங்களுக்கு பிறகு மிகப்பெரும் அசிங்கத்தில் இருந்து மீண்ட இலங்கை அணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள்

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து அணி ஏறத்தாழ 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது சொந்த மண்ணில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொழும்பில் நேற்று நடந்தது.

நான்கு வருடங்களுக்கு பிறகு மிகப்பெரும் அசிங்கத்தில் இருந்து மீண்ட இலங்கை அணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !! 2

முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில், 6 விக்கெட்டுக்கு 117 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது பங்களாதேஷ் அணி. விக்கெட் கீப்பர் முஷ்பிஹூர் ரஹிம் சிறப்பாக ஆடி, கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். அவர் 98 ரன்கள் எடுத்தார். ரஹிம் 8 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது பங்களாதேஷ் வீரர் என்ற சிறப்பை பெற்றார். மெஹடி ஹாசன் 43 ரன் சேர்த்தார். இலங்கை தரப்பில் பிரதீப், உதானா, தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 75 பந்துகளில் 82 ரன்களும், மேத்யூஸ் 52 ரன்களும் எடுத்தனர்.  இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சொந்த மண்ணில், இலங்கை அணி 44 மாதங்களுக்கு பிறகு வென்ற முதல் தொடர் இது. அவிஷ்கா பெர்ணான்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *