ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவில் 4 மாதமாக தங்கி இருக்கிறார். அவரது பயணம் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தொடங்கினார், இன்றுடன் அவரது நான்கு மாத பயணம் முடிவுக்கு வருகிறது. ஆஸ்திரேலியா கேப்டனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்த ஐபில்-இல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு கேப்டனாய் பொறுப்பேற்றார்.
இந்தியாவில் மறக்க முடியாத டெஸ்ட் தொடர்:
தெறி பார்மில் இருந்த இந்திய அணியை 4-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்று இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
அந்த டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 499 ரன் (சராசரி 71) மற்றும் 3 சதங்கள் அடித்து அசத்தினார். முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 109 அடித்து அவர் அணிக்கு வெற்றியை வாங்கி தந்தார்.
ஐபில்-ஐ மாசாக தொடங்கிய ஸ்மித்:
இந்த ஐபில்-இல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன் குவித்து அசத்தினார். இந்த ஐபில்-இல் இதுவரை அவர் விளையாடிய 14 போட்டிகளில் 421 ரன் அடித்துள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்கள் தான் இந்தியாவில் இருப்பார். அதன் பிறகு சாம்பியன்ஸ் ட்ராப்பியில் விளையாட தன்னுடைய சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார். ஆஸ்திரேலியாவிற்கு கிளம்புவதற்கு முன்பு இந்திய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பை பை’ சொன்னார்.