ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் ‘டுவென்டி–20’ தொடரில் இந்திய வீராங்கனை மந்தனா, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் ‘டுவென்டி–20’ நடத்தப்படுகிறது. இதன் பெண்களுக்கான தொடரின் முதல் ‘சீசன்’ 2015–16ல் துவங்கப்பட்டது. இதன் நான்காவது ‘சீசன்’ வரும் டிசம்பர் 1ல் துவங்குகிறது. இதில் இந்திய ‘டுவென்டி–20’ அணி துணைக்கேப்டன் மந்தனா ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இவர் பிரிஸ்பேன் அணி (2016–17) சார்பில் விளையாடி இருந்தார். இதைப்போல, சக வீராங்கனையும், ‘டுவென்டி–20’ அணி கேப்டனான ஹர்மன்பிரீத் சிட்னி தண்டர் அணிக்கான தனது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார். இரண்டாவது ‘சீசனில்’ மிரட்டிய இவர், சிட்னி தண்டர் அணிக்காக 13 போட்டியில் 296 ரன்கள் குவித்தார்.
மந்தனா கூறுகையில்,‘‘ஹரிகேன்ஸ் அணியில் பல நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளதாக பலர் கூறுகின்றனர். எப்போது அணியுடன் இணைவேன் என காத்திருக்கிறேன்,’’என்றார்.
மிதாலி ராஜ் அண்மையில் கிரிக்கெட் உலகில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாகத்தான் இருக்கும். ஆம் அண்மையில்
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார்.
ஆனால்மிதாலி ஏன் அன்றைய லெவனில் சேர்க்கப்படவில்லை என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்த
விசாரணையை பிசிசிஐ மேற்கொண்டு. இப்போதைய இந்திய அணியின் கேப்டன் ஹர்மண்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலியிடம்
நேரடியாக விசாரணை செய்து விளக்கத்தையும் பெற்றுள்ளனர். இத்தனைக்கும் டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளார்.
இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோலி, தோனி ஆகியோரைவிட 2,283 ரன்களை குவித்து முன்னணியில் இருக்கிறார் மிதாலி ராஜ். அப்படிப்பட்ட ஒரு சாதனைப் பெண்ணை டி20 கோப்பையின் அரையிறுதியில் அணியில் சேர்காததுதான் பிரச்சனைக்கு காரணம். உலகளவில் ஆண்கள் கிரிக்கெட் அளவுக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டிகளை பெரிதாய் யாரும் மதிப்பதில்லை என்ற பேச்சு இருக்கிறது. ஆனால் இந்த சர்சைக்கு பின்பு மிதாலி ராஜ் யார் என்றும் அவர் சாதனைகள் என்ன என்பதையும் பலர் தேட தொடங்கியுள்ளனர்.