சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 2021 பெண்களுக்கான தலைசிறந்த t20 தொடருக்கான ஆடும் லெவனை வெளியிட்டுள்ளது.
வருடம் தோறும் மூன்று விதமான தொடர்களிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுவரும், இதில் கடந்த ஆண்டில் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியிலிருந்து 5 வீராங்கனைகளும் இந்திய அணியிலிருந்து ஸ்மிருதி மந்தனா ஆகிய நட்சத்திர வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தற்பொழுது நாம் ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த டி20 தொடருக்கான பெண்கள் அனியின் ஆடும் லெவன் அட்டவணை பற்றி காண்போம்.
இதில் துவக்க வீரர்களாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவும், இங்கிலாந்து அணியின் டம்மி பேமெண்ட் ஆகிய இருவரையும் ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது, ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20போட்டியில் 255 ரன்கள் அடித்து இந்திய அணிக்காக அதிகமான ரன்களை அடித்த வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
இவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீராங்கனை டன்னி வியட் மற்றும் அயர்லாந்து அணியின் கேபி லீவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து 5வது இடத்தில் இங்கிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் நட் ஸ்கிவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், மேலும் இவர் தான் 2021 ஆம் ஆண்டில் தலைசிறந்த வீராங்கனைகளின் ஆடும் லெவனின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ஏமி ஜோன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சிறந்த ஆடும் லெவனின் பந்துவீச்சாளர்களாக தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வுள்வர்ட், மரிஜான் கப், மற்றும் சப்பின் இஸ்மாயில் ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் இவர்களை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் சோபி எக்லஸ்டோன், மற்றும் ஜிம்பாப்வே அணியின் லோரின் பிரி ஆகிய வீராங்கனைகளும் பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆடும் லெவனில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி தேர்ந்தெடுத்துள்ள கடந்த ஆண்டிற்கான தலைசிறந்த டி20 பெண்களுக்கான ஆடும் லெவன்
ஸ்மிருதி மந்தனா, டம்மி பேமோண்ட், டன்னி வியாட், கேபி லீவிஸ், நாட் ஸ்கிவர் (c), ஏமி ஜோன்ஸ் (wk), லாரா வுள்வர்ட், மாரிஜான் கப்,ஷோபி எக்ல்ஸ்டோன், லோரின் பிரி, ஷப்னிம் இஸ்மாயீல்,