என்ன இருந்தாலும் அது தப்பு தான்; இளம் வங்கதேச அணியின் கேப்டன் வேதனை !! 1

என்ன இருந்தாலும் அது தப்பு தான்; இளம் வங்கதேச அணியின் கேப்டன் வேதனை

உலகக்கோப்பை வென்ற பின்பு வீரர்கள் நடந்துக்கொண்ட விதம் துரதிர்ஷ்டவசமானது என்று வங்கதேச ஜூனியர் அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக வங்கதேசம் ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இப்போட்டி முடிந்த பின்பு மைதானத்திற்குள் புகுந்த வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டனர். இதனால் இந்திய – வங்கதேச வீரர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரே, இந்திய வீரர்களை உடனடியாக பெவிலியனுக்கு வர சொன்னார். இதனால் வீரர்களிடையிலான மோதல் தவிர்க்கப்பட்டது.

என்ன இருந்தாலும் அது தப்பு தான்; இளம் வங்கதேச அணியின் கேப்டன் வேதனை !! 2

கோப்பையை வென்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச கேப்டன் அக்பர் அலி “எங்களுடைய பவுலர்கள் சிலர் ஆக்ரோஷமாக இருந்தனர். அதனால் துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடைபெற்றது வருத்தமளிக்கிறது. இந்நேரத்தில் இந்திய அணியை நான் மனதார பாராட்டுகிறேன், அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். கோப்பையை வென்றது கனவு நிஜமான தருணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்தோம் அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. இது எங்களுக்கு வெறும் முதல் வெற்றி படிக்கட்டுதான்” என்றார்.

என்ன இருந்தாலும் அது தப்பு தான்; இளம் வங்கதேச அணியின் கேப்டன் வேதனை !! 3

இந்திய கேப்டன் பிரியம் கார்க் பேசும்போது “இது எங்களுக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. ஆனால் வெற்றிக்காக அணியின் வீரர்கள் கடுமையாக போராடினர். மிகவும் குறைவான ரன்களே எடுத்திருந்தாலும், வங்கதேசத்தை எளிதாக வெற்றி பெற விடவில்லை. பேட்டிங்கின்போது 220,230 ரன்களை எடுத்திருந்தால், வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்திருக்கும். அதேபோல பவுலிங்கின்போது எக்ஸ்ட்ராஸ் அதிகம் கொடுத்ததும் தோல்விக்கு காரணம்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *