ஏமாற்றி விட்டார்கள்... என்னால் இந்திய அணியின் கேப்டனாக முடியாததற்கு இவர்கள் தான் காரணம்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !! 1

இந்திய அணியின் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த கால இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்கின் பங்கு இன்றியமையாதது என்று கூறும் அளவிற்கு யுவராஜ் சிங் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் அபாரமாக விளையாட கூடிய திறமை படைத்த இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஏமாற்றி விட்டார்கள்... என்னால் இந்திய அணியின் கேப்டனாக முடியாததற்கு இவர்கள் தான் காரணம்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !! 2

ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த பொழுது இந்திய அணியின் துணை கேப்டனாக திகழ்ந்த யுவராஜ் சிங் தான் அடுத்த இந்திய அணியின் கேப்டன் என்று அந்த காலகட்டத்தில் பேசப்பட்டு வந்தது, ஆனால் யுவராஜ் சிங்கை கேப்டன் ஆக்காமல் இந்திய அணித் தேர்வாளர்கள் மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் கேப்டனாக நியமித்தனர்.

ஆனால் இது அப்போது இருந்த பல சீனியர் வீரர்களுக்கு கசப்பான விஷயமாகவே இருந்தது,மேலும் அவர்கள் தோனியின் கேப்டன்ஷிப்பை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் தோனி தன்னுடைய சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் இந்திய அணிக்கு உலக கோப்பை தொடரை வெற்றி பெற்று கொடுத்ததன் மூலம் அனைவருடைய விமர்சனத்தையும் பொய்த்துப் போகும்படி செய்து விட்டார்.

யுவராஜ் சிங் இந்திய அணியின் கேப்டனாக ஆக்காதது குறித்து அப்பொழுது பலரும் பேசி வந்தாலும் இது குறித்து யுவராஜ் சிங் எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.

ஏமாற்றி விட்டார்கள்... என்னால் இந்திய அணியின் கேப்டனாக முடியாததற்கு இவர்கள் தான் காரணம்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !! 3

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் இந்திய அணியிலிருந்து தன்னுடைய கேப்டன்ஷிப் மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,“இந்திய அணியின் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அப்பொழுது நடைபெற்ற கிரேக் செப்பல் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் எனக்கு கிடைக்கவேண்டிய கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைக்க விடாமல் செய்துவிட்டது, அப்பொழுது நான் எனது அணிக்கு தான் ஆதரவாக இருந்தேன் மற்றும் அணி வீரர்களுக்கு அதரவா இருந்தேன், ஆனால் அது பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை இதன் காரணமாகவே எனக்கு கேப்டன் பதவி மறுக்கப்பட்டது, ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து எனக்கு தெரியவில்லை, அப்பொழுது உடனே நான் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன், விரேந்தர் சேவாக் அணியில் இடம்பெறவில்லை மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஆனால் தனக்கு கொடுத்த பொறுப்பை தோனி மிகச் சிறப்பாகவே செய்தார்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *