எல்லாமே இப்ப எங்க Ground தான்... ஆனா சென்னை மக்கள் தான் வேற லெவல்; சிக்ஸர் நாயகன் சிவம் துபே நெகிழ்ச்சி !! 1
எல்லாமே இப்ப எங்க Ground தான்… ஆனா சென்னை மக்கள் தான் வேற லெவல்; சிக்ஸர் நாயகன் சிவம் துபே நெகிழ்ச்சி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் ஸ்பெசலானது என சிக்ஸர் நாயகன் சிவம் துபே தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 39வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை – லக்னோ இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ரஹானே (1), ஜடேஜா (16) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், சிக்ஸர் நாயகனான சிவம் துபே தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 60 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 108* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் குவித்தது.

எல்லாமே இப்ப எங்க Ground தான்... ஆனா சென்னை மக்கள் தான் வேற லெவல்; சிக்ஸர் நாயகன் சிவம் துபே நெகிழ்ச்சி !! 2

இந்தநிலையில், லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில்  தனது அதிரடி ஆட்டம் குறித்து பேசிய சிக்ஸர் நாயகன் சிவம் துபே, சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெசலானது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவம் துபே பேசுகையில், “சென்னை ரசிகர்களின் ஆதரவு வியப்பை ஏற்படுத்துகிறது. சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெசலானது. சென்னை ஆடுகளத்தில் விளையாடுவதை எப்போதும் விரும்புவோம். தோனி இருப்பதால் தற்போது அனைத்து ஆடுகளங்களிலும் எங்களுக்கு பெரிய ஆதரவு கிடைத்தாலும், சென்னை எப்போதுமே ஸ்பெசல் தான். சென்னை ஆடுகளத்தில் விளையாடும் போது எனது புதிய உத்வேகம் கிடைக்கும். ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப 1 ஓவர் தேவைப்பட்டது, எனவே நான் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதிகமான ரன்கள் குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தோம். தற்போது நாங்கள் வெற்றிக்கு தேவையான ரன்களை விட 10 – 15 ரன்கள் அதிகமாக எடுத்துவிட்டோம் என கருதுகிறேன். ஆனாலும் பந்துவீச்சில்  சிறப்பாக செயல்படுவது மிக அவசியம். வெற்றிக்கு  போதுமான ரன்களை விட 10 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது. ருத்துராஜ் கெய்க்வாட்டுடன் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது மிக சிறப்பானது, அவர் தனித்துவமிக்க வீரர்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *