இந்திய மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி வரும் வெளிநாட்டு வீரர்கள் 1

இந்திய மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி வரும் வெளிநாட்டு வீரர்கள்

இந்தியாவில் கொரனோ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு செல்லும் வேளையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அரசாங்கம் தவித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே ஐபிஎல் தொடர் தற்போது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்கிற அடிப்படையில் தற்போதைக்கு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் அனைவரையும் அவர்களது வீட்டிற்கு செல்ல பிசிசி அனுமதி அளித்துவிட்டது. அதன்படி அனைத்து இந்திய மற்றும் விளையாட்டு கிரிக்கெட் வீரர்கள் அவர்களது சொந்த வீட்டிற்கு செல்ல தொடங்கி விட்டனர். இங்கிலாந்து வீரர்கள் லண்டன் மாநகருக்கு சென்றுவிட்டதாகவும் அதேசமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும், மேற்கு இந்திய மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் அவர்களது ஊருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகள்

Jos Buttler, Tom Moody and Simon Doull took to Twitter.(IPL/File)

ஜோஸ் பட்டிலர் இங்கிலாந்து சென்று விட்டார், அவர் அங்கே தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இந்தியா ஒரு அழகிய நாடு. என்னை சந்தோஷத்துடன் வரவேற்று தக்க அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றி. இந்தியா தற்போது மோசமான நிலையில் உள்ளது, இருப்பினும் எனது பிரார்த்தனைகள் எப்பொழுதும் இந்திய மக்களுக்காக இருக்கும், கூடிய விரைவில் இந்தியா பழையபடி அதனுடைய இயல்பு நிலைக்கு திரும்பும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து டாம் மூடி, கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அன்பும் பிரார்த்தனைகளும் இருந்து கொண்டே இருக்கும். தயவு செய்து அனைவரும் வீட்டில் பத்திரமாக இருங்கள். மேலும் இந்தியாவில் என்னையும் எனது அணி சார்ந்தவர்களையும் பத்திரமாக பார்த்து கொண்டதற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

இந்திய மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி வரும் வெளிநாட்டு வீரர்கள் 2

சைமன் டவுல் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி கஷ்டமான நேரத்தில் இந்தியாவிலிருந்து சென்றது எனக்கு வருத்தம் அடையச் செய்கிறது. எனக்கு நீங்கள் நிறைய கொடுத்து இருக்கிறீர்கள் அதை நான் மறக்க மாட்டேன். தயவு செய்து அனைவரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்களை மீண்டும் நான் விரைவில் வந்து சந்திப்பேன் நிலைமை சரியானவுடன் கண்டிப்பாக இந்தியாவுக்கு மறுபடியும் வருவேன் என்று கூறியுள்ளார்

ஆலன் வில்கின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவை விட்டு கனத்த இதயத்துடன் செல்கிறேன், இருந்தாலும் என்னுடைய பிராத்தனைகள் நாட்டு மக்களுக்காக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் உங்களது குடும்பங்களை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி வரும் வெளிநாட்டு வீரர்கள் 3

இதுகுறித்து சமீபத்தில் பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி எப்படி ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா வந்தது என்று தெரியவில்லை. வீரர்களின் பாதுகாப்போடு காரணமாகவே ஐபிஎல் தொடர் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக மீண்டும் மீதி உள்ள ஐபிஎல் போட்டிகள் நல்ல முறையில் நிலைமை சரியானவுடன் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *