மீண்டும் கேப்டனான “தாதா” கங்குலி... சேவாக்கிற்கு அணியில் இடம்; உலக ஜாம்பவான்களுக்கு எதிராக தரமான டீமை அறிவித்த இந்தியா !! 1

உலக லெஜண்ட்ஸ் அணியுடனான போட்டிக்கான இந்திய லெஜண்ட்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். இந்தமுறை இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக லெஜண்ட்ஸ் அணியுடன், இந்திய அணியின் முன்னாள் வீரர்களை கொண்ட அணி மோதுகிறது.

 

செப்டம்பர் மாதம் 16ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், கங்குலி தலைமையிலான இந்திய மகாராஜாஸ் அணி, இயன் மோர்கன் தலைமையிலான உலக லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

மீண்டும் கேப்டனான “தாதா” கங்குலி... சேவாக்கிற்கு அணியில் இடம்; உலக ஜாம்பவான்களுக்கு எதிராக தரமான டீமை அறிவித்த இந்தியா !! 2

இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி தலைமையிலான இந்திய மகாராஜாஸ் அணியில் விரேந்திர சேவாக், யூசுஃப் பதான், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ஆர்.பி சிங் போன்ற வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இயன் மோர்கன் தலைமையிலான உலக லெஜண்ட்ஸ் அணியில் ஜாக் காலிஸ், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், ஸ்டைன், கிப்ஸ், ராம்டின் போன்ற பல முன்னாள் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர்.

மீண்டும் கேப்டனான “தாதா” கங்குலி... சேவாக்கிற்கு அணியில் இடம்; உலக ஜாம்பவான்களுக்கு எதிராக தரமான டீமை அறிவித்த இந்தியா !! 3

இந்தியா மகாராஜாஸ் அணி:

சௌரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, பிரக்யான் ஓஜா, அசோக் டிண்டா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொஹிந்தர் சர்மா, ரிதீந்தர் சிங் சோதி.

உலக ஜெயிண்ட்ஸ் அணி:

லெண்டல் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மேட் பிரயர், நேதன் மெக்கல்லம், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மோர்டசா, அஸ்கர் ஆஃப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீல், கெவின் ஓ பிரயன், தினேஷ் ராம்டின்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *