வேற லெவலில்.. மகளுடன் இன்ஸ்டாகிராமில் லூட்டி அடிக்கும் கங்குலி..! 1

கங்குலி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் அவரது மகன் கிண்டலாக கேள்விகள் எழுப்பியது தற்போது டிரென்ட் ஆகியுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், மூன்றாவது நாளில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

வேற லெவலில்.. மகளுடன் இன்ஸ்டாகிராமில் லூட்டி அடிக்கும் கங்குலி..! 2

கங்குலி இந்த புகைப்படத்தை வெளியிட்ட உடனேயே, கங்குலியின் மகள் சனா கங்குலி, “நீங்கள் விரும்பாதது என்ன?” என்று கேட்டு கமெண்ட் செய்தார். சவுரவ் கங்குலி ஒரு நகைச்சுவையான பதிலுடன் வந்து சனாவை “கீழ்ப்படியாதவர்” என்று அழைத்தார்.

“நீங்கள் மிகவும் கீழ்ப்படியாமல் போகிறீர்கள்” என்று பிசிசிஐ தலைவர் பதிலளித்தார்.

இதற்க்கு சனா“உங்களிடமிருந்து கற்றுகொள்கிறேன்,”  என்று சிரித்த ஈமோஜியுடன் ரிப்லே செய்தார்.

வேற லெவலில்.. மகளுடன் இன்ஸ்டாகிராமில் லூட்டி அடிக்கும் கங்குலி..! 3

சவ்ரவ் கங்குலி வரலாற்று சிறப்புமிக்க பிங்க் நிற பந்து போட்டியில், முக்கிய விளையாட்டு பிரபலங்கள், இந்தியா மற்றும் வாங்கதேசம் இரு நாட்டு அரசியல் பிரமுகர்களையும் அழைப்பு விடுத்தது, இப்போட்டியில் கலந்து கொள்ள செய்தார்.

இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு இதுவரை கண்டிராத அளவிற்கு கூட்டம் வந்ததால், அடுத்தடுத்த தொடர்களிலும் பிங்க் நிறப்பந்து டெஸ்ட் போட்டியை உள்ளடக்க திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

டிசம்பர் முதல் வாரம் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்க இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *