தோனி எப்பொழுது ஓய்வு பெறுவார்..? ஓபனாக பேசியுள்ளார் விராட் கோஹ்லி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட் வாஷ் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த விராட் கோலி, தோனி பற்றிய முடிவு குறித்த கேள்விக்குப் பதில் அளித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வில் இருக்கும் தோனி வங்கதேசத்துக்கு எதிராகவும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. தோனி இன்று ராஞ்சியில் இந்திய அணியுடன் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
அப்போது தோனி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி, “கங்குலி நான் வாழ்த்துக் கூறினேன், அவர் பிசிசிஐ தலைவராக வருவது சிறப்பு வாய்ந்தது. ஆனால் தோனி பற்றி அவர் இன்னமும் என்னிடம் எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக அவருக்கு தேவை ஏற்படும் போது என்னுடன் பேசுவார். அவர் தன்னை இது தொடர்பாக பேச அழைக்கும் போது கங்குலியைச் சந்திப்பேன்” என்றார்.
திங்களன்று கங்குலி கூறும்போது, கோலியுடன் 24ம் தேதி பேசவிருப்பதாகவும் வங்கதேச டி20 தொடரிலிருந்து அவர் விலக முடிவெடுத்தால் அது அவரது விருப்பம், அந்த முடிவு அவரைப்பொறுத்ததே என்றார்.