தோனி இந்திய அணிக்குள் வருவதற்கு காரணம் கங்குலி தான் என இந்திய வீரர் கூறியதற்கு.. உடனடியாக ரியாக்ட் செய்து கங்குலி கூறிய அதிர்ச்சி பதில் இதுதான்! 1

தோனி இந்திய அணிக்குள் வருவதற்கு காரணம் கங்குலி தான் என கூறியதற்கு.. உடனடியாக கங்குலி கூறியது இதுதான்!

தோனி இந்திய அணிக்குள் வருவதற்கு காரணம் கங்குலி என இந்திய வீரர் மயங்க் அகர்வால் கூறியதற்கு கங்குலி உடனடியாக அதிர்க்கரமான பதிலை அளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்குள் பிரவேசம் செய்து இத்துடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தோனி அறிமுகமான முதல் போட்டியே அனைவரும் மறக்கக் கூடிய ஒன்றாக இருந்துவிட்டது. காரணம், அதில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

தோனி இந்திய அணிக்குள் வருவதற்கு காரணம் கங்குலி தான் என இந்திய வீரர் கூறியதற்கு.. உடனடியாக ரியாக்ட் செய்து கங்குலி கூறிய அதிர்ச்சி பதில் இதுதான்! 2

பின்னர் தோனி அனைவரின் கவனத்தையும் ஈற்பதற்கு நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ளவில்லை. தனது ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான சதம் அடித்தார். அப்போட்டியில் அவர் 148 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு, இந்திய அணிக்காக அவர் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தையும் பலரும் அறிவர். அவற்றில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது, 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011ஆம் ஆண்டு நாள் போட்டிக்கான உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வென்றதாகும்.

தோனி இந்திய அணிக்குள் வருவதற்கு காரணம் கங்குலி தான் என இந்திய வீரர் கூறியதற்கு.. உடனடியாக ரியாக்ட் செய்து கங்குலி கூறிய அதிர்ச்சி பதில் இதுதான்! 3

இதன்மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.

2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். 2017ஆம் ஆண்டு அனைத்துவித கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்தார். அதன்பிறகு அணி வீரராக ஆடிவந்த தோனி, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெளியேறிய பிறகு, தற்போதுவரை இந்திய அணியில் ஆடவில்லை.

இந்நிலையில், இத்தகைய பல சாதனைகளை நிகழ்த்திய தோனி இந்திய அணியில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அப்போதைய கேப்டன் கங்குலி ஆகும். தோனிக்கு முன்னதாகவே இந்திய அணியில் அறிமுகமான பார்த்தீவ் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக அணியில் இருக்க தோனியை ஏன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்தேன் கங்குலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

தோனி இந்திய அணிக்குள் வருவதற்கு காரணம் கங்குலி தான் என இந்திய வீரர் கூறியதற்கு.. உடனடியாக ரியாக்ட் செய்து கங்குலி கூறிய அதிர்ச்சி பதில் இதுதான்! 4

இந்திய வீரர் மயங்க் அகர்வால் உடன் நடந்த அந்த பேட்டியில், “தோனி பல சாதனைகள் புரிந்து இருந்தாலும், அவர் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது கங்குலி நீங்கள் தான்” என மயங்க் அகர்வால் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய கங்குலி கூறுகையில்,

“சிறந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது எனது கடமை. ஒரு கேப்டனாக அனைத்து விதங்களிலும் யோசித்து செயல்பட வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு உள்ளுணர்வு தோன்றும். அதன்படி செயல்பட்டால் நிச்சயம் நல்ல பலனே கிடைக்கும். தோனி விஷயத்திலும் எனக்கு அவ்வாறு தோன்றியது. அணிக்கு சரியான வீரராக இருப்பார் என நான் நம்பினேன். இந்த அளவிற்கு தோனி உயர்ந்து இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல பினிஷர் மட்டுமல்லாது; சிறந்த வீரரும் கூட. ஏனெனில் நான் கேப்டனாக இருந்த போது அவர் மூன்றாவது வீரராக களம் இறங்கி சதம் விளாசி இருக்கிறார். பல இக்கட்டான சூழலில் சிறப்பாக செயல்படக் கூடியவர்.” என தோனிக்கு புகழாரம் சூட்டினார் கங்குலி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *