கொல்கத்தா அணிக்கு பஞ்சாயத்து செய்யும் “தாதா” கங்குலி
ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான கொல்கத்தா அணியின் கேப்டன் யார் என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி புதிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.
உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.
சமீபத்தில் இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின்னை, கொல்கத்தா அணியே இந்த முறையும் 9.6 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கிறிஸ் லின்னின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே காம்பீர் இல்லாததால், இந்த தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்த போவது யார் என்று தெரியாமல் இருக்கையில், கிறிஸ் லின்னும் காயத்தால் விலகியது கொல்கத்தா ரசிகர்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்த போவது என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் ’Knight Club’ என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஸ்டார் ஸ்போர்ஸ் நடத்த திட்டமிட்டுள்ளது. வரும் 25ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா அணியின் கேப்டன் யார் என்பது கூட அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.