தலை கீழா நின்னாலும் தோனியை போல் யாரும் இனி கிடைக்க மாட்டார்கள்; கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கிண்டல் செய்வதை கிரிக்கெட் ரசிகர்கள் நிறுத்த வேண்டும் என்று சவுரவ் கங்குலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றியது. இதில் முன்னாள் கேப்டன் தோனியின் ஆமை வேக பேட்டிங் குறித்து பலரும் தாறுமாறாக கருத்து தெரிவித்தனர்.

தவிர, வெற்றிக்கு கொஞ்சம் கூட முயற்சிக்காத வயதான தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துக்களை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரங் கங்குலி, ரசிகர்கள் தோனியை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், ‘தோனியை தொடர்ந்து கேலியாக விமர்சிப்பதை ரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும். இனி இந்திய அணிக்கு அவரைப்போல சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைப்பாரா என தெரியவில்லை. அவர் இளம் வயதில் பல சிக்சர்கள் அடித்துள்ளார். தற்போதும் அதேபோல இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது அதிகம். அணி நிர்வாக அவருடன் பேசி 6வது வீரராக களமிறங்க செய்ய வேண்டும். அதில் அவர் சிறப்பாக செயல்படுவார்’ என்றார்.