கோஹ்லி படையால் இந்த ஒரு அணியை வீழ்த்தவே முடியாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

கோஹ்லி படையால் இந்த ஒரு அணியை வீழ்த்தவே முடியாது; முன்னாள் வீரர் சொல்கிறார்

இந்நாள் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியால், முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான அணியை வீழ்த்த முடியாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பாதையில் கம்பீரமாக நடைபோட்டு வந்தாலும், வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருவதையே வாடிக்கையாக்கி வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பும் கோஹ்லி படை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை முதன்முறையாக வென்று சாதனை பெற்றது. இந்திய அணி இந்த தொடரை வென்றிருந்தாலும் ஸ்மித் – வார்னர் போன்ற வலுவான வீரர்கள் இல்லாத அணியை தான் வீழ்த்தினார் என்ற கருத்தும் இருந்து வருகிறது.

கோஹ்லி படையால் இந்த ஒரு அணியை வீழ்த்தவே முடியாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

அதே போல் 2018ல் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் டெஸ்ட் தொடர்களிலும் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய படை, சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தோல்வியையே தழுவியது.

ஆனாலும் கோஹ்லி தலைமையிலான தற்போதைய இந்திய அணியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த சிறந்த டிராவலிங் இந்திய அணி இது தான் என்றும், கடந்த 20 வருடங்களில் இது தான் மிகச்சிறந்த அணி என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்திற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கோஹ்லி படையால் இந்த ஒரு அணியை வீழ்த்தவே முடியாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான ஆகாஷ் சோப்ராவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியதாவது;

கங்குலி தலைமையில் நாங்கள், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை டிரா செய்தோம். பாகிஸ்தான் மண்ணிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றோம். இங்கிலாந்திலும் தோல்வியடையாமல், தொடரை டிரா செய்தோம். கங்குலி தலைமையிலான டெஸ்ட் அணி தான் நமக்கு வெளிநாடுகளில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதை கற்றே கொடுத்தது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது. ஆனால் தென்னப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரில் தோற்றது என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *