தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி அறிவிப்பு ! புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு வீரர்கள் !
இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-0 கைப்பற்றியது என்பது குறிப்பிடதக்கது. தென்னாபிரிக்க அணி தனது சொந்த மண்ணில் இலங்கை அணியை வதம் செய்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு பின் தற்போது பாகிஸ்தான் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாபிரிக்க அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த சுற்றுப்பயணம் வருகின்ற ஜனவரி 26ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தானிலுள்ள கராச்சி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த பின்பு 3 டி20 போட்டிகள் லாகூரில் நடக்கும்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட இருக்கிறார். ஐடன் மார்க்ராம் மற்றும் டீன் எல்கர் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் தற்போது அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி, மற்றும் ஜார்ஜ் லிண்டே ஆகிய மூன்று ஸ்பின்னர்களை தென்ஆப்பிரிக்கா அணி தேர்வு செய்து இருக்கிறது. சரேல் எர்வி ஆல்-ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் தொடருக்கான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி :
குயிண்டன் டி காக் , பவுமா, ஐடன் மார்க்ராம், டு பிளெசிஸ், டீன் எல்கர், ரபாடா, பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், என்ஜிடி, வான் டெர் டுசென், நார்ட்ஜே, முல்டர், சிபாம்லா, ஹென்ட்ரிக்ஸ், வெர்ரெய்ன், சரேல் எர்வி, பீட்டர்சன், தப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே, டுபாவிலன்,ஓட்னியல் பார்ட்மேன்
Here is your #Proteas Test squad, for the two Test tour of Pakistan later this month. Congratulations to Ottniel Baartman earning his maiden #Proteas call up and Daryn Dupavillon on his maiden Test call-up. ?
— Cricket South Africa (@OfficialCSA) January 8, 2021
#PAKvSA #SeeUsOnThePitch pic.twitter.com/MslVR3HqhV