அசால்டா நினைச்சிடாதீங்க... டி.20 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணியும் ஆபத்து தான்; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! 1

உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும் என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி,இங்கிலாந்து அணியை 2-1 அதன் சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்வ வைத்தது.அசால்டா நினைச்சிடாதீங்க... டி.20 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணியும் ஆபத்து தான்; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! 2

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா. அணி உலக கோப்பை தொடரில் நிச்சயம் பலமாய்ந்த அணிகளில் ஒன்றாக வளம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணியை குறைத்து மதிப்பிடாமல் ஒவ்வொரு அணியும் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களின் அணிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.அசால்டா நினைச்சிடாதீங்க... டி.20 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணியும் ஆபத்து தான்; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர், இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியதற்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், கடந்த ஆண்டிலிருந்து சிறப்பாக மீண்டு வந்த தென்னாப்பிரிக்க அணி உண்மையில் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத மற்றும் சவாலான அணியாக திகழும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.அசால்டா நினைச்சிடாதீங்க... டி.20 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணியும் ஆபத்து தான்; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! 4

உலகக் கோப்பை தொடருக்கான போட்டியில் குரூப் B யில் இடம் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக போட்டிபோடும்.

முன்பு எப்பொழுதும் இல்லாதது போல் தென் ஆப்பிரிக்கா அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *