தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மரணம்!! 1

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைட் மேகீட் தனது 66 வயதில் மலேசியாவில் மரணமடைந்தார்.

தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கான கலவரங்கள் நடந்துக்கொண்டு இருந்தபொழுது நிறவாதம் அற்ற தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஜாம்பவான் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் சைட் மேகீட்.

தென்னாப்ரிக்காவின் மேற்கு மாகாண கிரிக்கெட் வாரியத்தின் மிகப்பெரிய ஜாம்பவானாகவும் 70 மற்றும் 80களில் திகழ்ந்தார் சைட்.

முதல்தர போட்டிகளில், மொத்தம் 67 போட்டிகள் ஆடியுள்ள சைட் 2650 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதமும் 15 அரைசதங்களும் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 128 ஆகும்.

பந்துவீச்சில் சிறப்பாக ஆடிய இவர் 12.99 சராசரியுடன், 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

1991ம் ஆண்டு ஓய்வு பெரும் வரை நிறவெறியற்ற தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்க்காக ஆடினார். நிறைவேறியின் காரணமாக தென்னாபிரிக்கா சர்வதேச அணிக்கு ஆடும் வாய்ப்பு இவருக்கு இறுதி வரை அளிக்கப்படவில்லை.

அதன்பின், மேற்கு மாகாணத்தில் அண்டர் 19 அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பிலும் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இவரது மகன் ராசாத் மேகீட் தென்னாபிரிக்கா அணிக்காக முதல்தர போட்டியிலும், மேற்கு மாகாண அணிக்கும் ஆடி வருகிறார். உலக கோப்பை 2015 ல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ பிளேஸர் மூலம் ராசாத் மேகீட் கவுரவிக்கப்பட்டார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவரது வட்டாரங்கள் தெரிவித்ததாவது, தென்னாபிரிக்கா கிரிக்கெட் தனது ஜாம்பவானை இழந்தது என சைட் மலேசியாவில் இறந்த பிறகு தெரிவித்தது. மேலும், இதில் வருத்தப்படக்கூடிய ஒன்று என்னவென்றால் நிறைவேறியின் காரணமாக அவர் இந்த நாட்டிற்கு ஆடமுடியாமல் போனது தான் என கூறியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *