உலககோப்பைக்காக 15 பேர் கொண்ட அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்த அதே நேரத்தில், புது நிறத்துடன் கூடிய உலக கோப்பைக்காக பிரத்யேக உடையை வெளியிட்டது.
மார்பகம் முதல் வயிற்றுப் பகுதி வரை சற்று வெளிர் நிற பச்சையும் தோள்பட்டைப் பகுதியில் அடர் பச்சை நிறத்தையும் கொண்டிருந்தது அந்த ஜெர்சி. இந்த சர்ச்சைக்கு ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்றிலிருந்து அனைத்து நியூ பாலன்ஸ் ஸ்டோர்களிலும் ஜெர்சி கிடைக்கும் அதனை ரசிகர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து இருந்தது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.
தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பை அணி குறித்து..
சமீபகாலமாக ஒருநாள் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை தராத வீரர்களான ஹசிம் அம்லா மற்றும் ஐடென் மார்க்ரம் இருவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மாறாக, நன்றாக ஆடி வந்த ரீசா ஹென்ரிக்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மொரிஸ்க்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
டி காக், டேல் ஸ்டெய்ன், காகிசோ ரபாடா மற்றும் அண்டிலே பேளுக்குவாயோ ஆகியோர் எதிர்பார்த்ததை போலவே அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணியை டு பிளேஸிஸ் வழிநடத்துகிறார். இதில் ஆச்சர்யம் தரும் விதமாக வேகபந்துவீச்சாளர் அன்ரிச் நோர்டே சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தில் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் லுங்கி இங்கிடிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
உலககோப்பைக்கு செல்லும் இங்கிலாந்து அணி:
ஃபாஃப் டூ பிளெசிஸ் (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஜே.பி. டுமினி, ஹசிம் அம்லா, ஐடென் மார்கிராம், ரேசி வான் டெர் டூஸன், டுவைன் ப்ரோட்டோரியஸ், ஆண்டில் பெஹல்குவே, கிகிஸோ ரபாடா, டேல் ஸ்டெயின், லுங்கி இகிடி, அன்ரிச் நொர்டே, இம்ரான் தாஹிர், தாபிரீக் ஷம்ஸி
