ஐ.சி.சி.யின் ஒருநாள் அணித் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் தென்னாபிரிக்கா அணி தரவரிசையில் பின் தங்கியது.
இதனிடையே, இந்த தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்தது. 113 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா மூன்றாவது இடத்தில் இருந்தது. தொடரின் முடிவில் தென்னாபிரிக்கா 110 புள்ளிகளுக்கு தள்ளப்பட்டு நான்காவது இடத்திற்க்கு பின் தங்கியது. இலங்கை அணி மூன்று புள்ளிகள் பெற்று 80 புள்ளிகளாக மாற்றியது. எனினும், இலங்கை அணி பட்டியலில் எட்டாவது இடத்தில் நிலையான இருந்தது.
![ஐசிசி தரவரிசை பட்டியல்: தென்னாபிரிக்கா அணி சறுக்கல்!! 2 ஐசிசி தரவரிசை பட்டியல்: தென்னாபிரிக்கா அணி சறுக்கல்!! 2](https://tamil.sportzwiki.com/wp-content/uploads/2018/06/sa-m1.jpg)
இங்கிலாந்து 127 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும், பங்களாதேசமும் முறையே ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தை ஆக்கிரமிக்கின்றன.
![ஐசிசி தரவரிசை பட்டியல்: தென்னாபிரிக்கா அணி சறுக்கல்!! 3 ஐசிசி தரவரிசை பட்டியல்: தென்னாபிரிக்கா அணி சறுக்கல்!! 3](https://tamil.sportzwiki.com/wp-content/uploads/2018/06/982914608-2.jpg)
இந்த நூற்றாண்டில் முதல் தடவையாக ஆஸ்திரேலியா அணி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ICC ODI Men’s Team Rankings. Credit: ICC
சிறப்பாக பந்துவீசி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி
கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை குவித்தார். இதன்மூலம் 299/8 என வலுவான நிலையை அடைந்தது இலங்கை அணி. தென் ஆபிரிக்க அணி 121 ரன்களைக் குவித்ததுடன், 178 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதன் விளைவாக ஐசிசி ஒருநாள் ஆண்கள் அணி தரவரிசையில் நான்காவது இடத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
![ஐசிசி தரவரிசை பட்டியல்: தென்னாபிரிக்கா அணி சறுக்கல்!! 5 Sri Lanka vs South Africa, Match Report](https://cricketaddictor.com/wp-content/uploads/2018/08/prv_1534104450.jpeg)